Indian National Football Team: இந்தியாவில் அனைவரும்  கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்வியில் இருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் மீண்டு இயல்பு நிலைக்கு வந்திருப்பீர்கள். இப்போது மற்றொரு உலகக் கோப்பை செய்தி வந்துள்ளது. ஆனால் இம்முறை அது கிரிக்கெட் இல்லை கால்பந்து. கால்பந்து உலகக் கோப்பையை கடந்தாண்டு தானே மெஸ்ஸி முத்தமிட்டுக்கொண்டிருந்தார் என நீங்கள் முணுமுணுத்தாலும், இது அடுத்த அதாவது 2026ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை தொடரை பற்றி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம் அந்த உலகக் கோப்பைக்கு இந்திய அணி இன்னும் தகுதிபெறவே இல்லை. ஆனால் 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இரண்டாம் தகுதிச்சுற்று தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி குரூப்-ஏ பிரிவில் குவைத், கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி அடுத்த மூன்றாம் தகுதிச்சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என்றால் இந்த சுற்றில் முதலிரண்டு இடங்களில் நிறைவு செய்ய வேண்டும்.


புதிய சரித்திரம் படைக்குமா?


குவைத் அணியுடனான முதல் போட்டியில் இந்திய கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்த சுற்று இரண்டாவது மற்றும் முக்கியமான போட்டி இன்று நடைபெற்றுகிறது. ஆசிய சாம்பியனான கத்தாரை இந்தியா இன்று சந்திக்கிறது. குறிப்பாக இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும். அடுத்த போட்டியில் வென்றாலும் வாய்ப்புள்ளது, இருப்பினும் கத்தாரை வெல்வது என்பது இந்திய கால்பந்து அணிக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும். நான்கு ஆண்டுகளுக்கு கத்தார் அணியுடன் போட்டியில் இந்தியா 0-0 என டிரா செய்து வரலாற்றை படைத்திருந்தது. 


மேலும் படிக்க | இந்திய அணியில் வரப்போகும் எக்கச்சக்க மாற்றம்... இந்த வீரர் மட்டும் இருப்பார் - மிஷன் சாம்பியன்ஸ் டிராபி!


அந்த வகையில், இன்றைய போட்டியை இந்தியா வென்றால் புதிய சரித்திரத்தை பதிக்கும். இந்த போட்டியில் வென்றால் மூன்றாவது தகுதிச்சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு ஏறத்தாழ உறுதியாகிவிடும் எனலாம். இந்திய ஆடவர் கால்பந்து அணி கத்தாரை எதிர்கொள்ள தயாராக உள்ளது. 


போட்டி எப்போது, எதில் காண்பது?


ஃபிஃபா கால்பந்து 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் கத்தார் இடையேயான இன்றைய போட்டி  ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த போட்டி, தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், ஜியோ சினிமா மொபைல் செயலியிலும் மற்றும் இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.


இந்திய அணி வீரர்கள் விவரம்


முன்கள வீரர்கள்: இஷான் பண்டிதா, லல்லியன்சுவாலா சாங்டே, மன்வீர் சிங், ராகுல் கேபி, சுனில் சேத்ரி


மிட்பீல்டர்கள்: அனிருத் தாபா, பிராண்டன் பெர்னாண்டஸ், லாலெங்மாவியா, லிஸ்டன் கோலாகோ, மகேஷ் சிங் நௌரெம், ரோஹித் குமார், சாஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங் வாங்ஜாம், உதாந்த சிங் குமம்


டிஃபெண்டர்கள்: ஆகாஷ் மிஸ்ரா, லால்சுங்னுங்கா, மெஹ்தாப் சிங், நிகில் பூஜாரி, ராகுல் பெகே, ரோஷன் சிங் நௌரெம், சந்தேஷ் ஜிங்கன், சுபாசிஷ் போஸ்


கோல்கீப்பர்கள்: அம்ரீந்தர் சிங், குர்பிரீத் சிங் சந்து, விஷால் கைத்


மேலும் படிக்க | வீரர்களை ஆசுவாசப்படுத்திய பிரதமர் மோடி வீடியோ காட்சி வைரல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ