IPL 2024: சிஎஸ்கே, மும்பை இல்லை... இந்த அணிதான் மிக பலமானது - பெஸ்ட் பிளேயிங் 11
Gujarat Titans IPL 2024: சிஎஸ்கே, மும்பை அணிகளை விட ஹர்திக் பாண்டியா விட்டுச்சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிதான் மிக பலமாக காணப்படுகிறது எனலாம்.
Gujarat Titans IPL 2024: ஏப்ரல், மே மாதங்களை தவிர மற்ற 10 மாதங்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒற்றுமையாய் நின்று இந்திய அணியையும், அணியின் அனைத்து வீரர்கையும் ஆதரித்து போற்றுவார்கள். ஆனால் இந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்காக அவர் இல்லாத மற்ற அணிகளையும், மற்ற அணிகளின் விளையாடும் இந்திய வீரர்களையும் கூட தூற்றுவார்கள் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அந்த வகையில், இந்த வரும் மார்ச் மாதம் முதலே ஐபிஎல் (Indian Premier League) ரசிகர்கள் தங்களின் சண்டையை சமூக வலைதளங்களில் தொடங்கிவிட்டனர். இது வெறி அனைத்து அணிகளிலும் காணப்படுவதில்லை எனலாம். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளின் ரசிகர்கள்தான் அதிகம் இந்த சண்டைகளில் ஈடுபடுவார்கள். இதில் சிஎஸ்கே, மும்பை அணிகள் தலா 5 கோப்பைகளை வென்றிருக்கிறது, ஆர்சிபி ஒரு கோப்பையை கூட வென்றதில்லைதான். ஆனால், அந்த அணியின் மீதான ஈர்ப்பு மட்டும் அந்த அணியின் ரசிகர்களுக்கு குறையவே இல்லை எனலாம்.
சிஎஸ்கே, மும்பையை விட...
ஆர்சிபி கோப்பையை வெல்லாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் பெரும் கொண்டாட்ட தருணத்தை உருவாக்கிவிடும் எனலாம். குறிப்பாக விராட் கோலி இருக்கும் வரை அந்த படையை யாராலும் அசைக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது மும்பை, சென்னை அணிகள் வலுவானதாக இருந்தாலும் அதைவிட வலுவாக இருப்பது ஆர்சிபி இல்லை, சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிதான்.
2022இல் அறிமுகமான தொடரிலேயே சாம்பியன் பட்டம், 2023இல் இரண்டாமிடம், இத்தனையையும் வென்ற தந்த ஹர்திக் பாண்டியா விட்டுச்சென்றாலும் பலம் கூடிதான் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் முழு ஸ்குவாடையும், Impact Player உடனான மிக பலமான பிளேயிங் லெவனையும் இதில் காணலாம்.
மேலும் படிக்க | CSK: பதிரானா இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை... தோனி கையில் எடுக்கும் புது அஸ்திரம்!
பேட்டிங் படை
குஜராத் அணியின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், சுப்மான் கில், சாய் சுதர்சன், கேன் வில்லியம்ன், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், அபினவ் மனோகர் என ஒரு பெரும் படையே உள்ளது. தற்போது ராபின் மின்ஸ் என்ற அதிரடி ஃபினிஷர் வேறு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவரை இளம் வயது பொல்லார்ட் என்கிறார் ராபின் உத்தப்பா. அப்படியென்றால் அவரின் ஆட்டம் எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அடுக்கடுக்கான ஆல்-ரவுண்டர்கள்
அதாவது இது வெறும் முழு நேர பேட்டிங் ஆடும் வீரர்கள்தான். ஆல்-ரவுண்டர்கள் லிஸ்ட் எடுத்தால் அஸ்மத்துலா ஓமர்ஸாய், ராகுல் தேவாட்டியா, விஜய் சங்கர், ஷாருக் கான் என அனுபவ வீரர்கள் அடுக்கடுக்காக உள்ளனர். தர்ஷன் நல்கண்டே என்ற மற்றொரு அதிரடிக்காரரும் லிஸ்டில் இருக்கிறார். இதில் அபினவ் மனோகர், சாய் சுதர்சனும் கூட ஆல்-ரவுண்டர் லிஸ்டில்தான் வருகின்றனர். சரி பேட்டிங்கிலும், ஆல்-ரவுண்டர் பிரிவில்தான் இவ்வளவு பெரிய படை இருக்கிறது என்றால் பந்துவீச்சோ இன்னும் பலமாக உள்ளது.
பந்துவீச்சிலும் பிரச்னையே இல்லை
முகமது ஷமி தொடரில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் இப்போது வரை யாரையும் மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவிக்கவில்லை. முதற்கட்ட போட்டிகளில் ரஷித் கான் விளையாடுவதும் சந்தேகம் என்கின்றனர். அப்படியும் குஜராத் டைட்டன்ஸ் அணி பலமாகவே உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன், அயர்லாந்தின் ஜோஷ்வா லிட்டில் ஆகிய வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களுடன் மோகித் சர்மா, உமேஷ் யாதவ், கார்த்திக் தியாகி, என்ற இந்திய சிறுத்தைகளும் உள்ளன. சுழற்பந்துவீச்சில் நூர் அகமது, சாய் கிஷோர் ஆகியோரும் உள்ளனர். வேகப்பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சிலும் பல ஆல்-ரவுண்டிங் ஆப்ஷன்களையும், அவர்களுக்கான சரியான பேக்-அப்பையும் குஜராத் வைத்திருக்கிறது.
மேலும் படிக்க | மீண்டும் வலுவான அணியாக மாறிய மும்பை இந்தியன்ஸ்! பிளேயிங் 11 இது தான்!
யார் அந்த 4 வெளிநாட்டு வீரர்கள்?
பிளேயிங் லெவனை பொறுத்தவரை சுப்மான் கில் - சாய் சுதர்சன் இணை வலது - இடது காம்பினேஷனில் இறங்கும். அடுத்து விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், ஷாருக் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ராகுல் திவாட்டியா ஆகியோர் இடம்பிடிப்பார்கள். இதில் ராபின் மின்ஸ் அல்லது விஜய் சங்கர் Impact Player ஆக பயன்படுத்தப்படலாம்.
சுழற்பந்துவீச்சில் திவாட்டியா 2 ஓவர்கள் வீசுவார் என்பதால் ரஷித் கான் இல்லாத பட்சத்தில் நூர் அகமது வருவார். வேகப்பந்துவீச்சில் மோகித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன், உமேஷ் யாதவ் இடம்பிடிப்பார்கள். இது யாராவது சொதப்பும்பட்சத்தில் பேக்-அப் வீரர்கள் உள்ளே வர வாய்ப்புள்ளது.
வில்லியம்சன் எங்கே பாஸ்?
கேன் வில்லியம்சனை பேட்டிங்கில் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு வெளிநாட்டு வீரரை பந்துவீச்சில் பலிகொடுத்தாக வேண்டும். உதாரணத்திற்கு நூர் அகமதிற்கு பதில் இந்திய வீரர் சாய் கிஷோரை பயன்படுத்தலாம், ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதில் தியாகியை பயன்படுத்தலாம். ஆனால், வெளிநாட்டு வீரரை Impact Player ஆக பயன்படுத்த பலரும் விரும்ப மாட்டார்கள். இருப்பினும், பேக் அப் காம்பினேஷனில்தான் வில்லியம்சனும் வருகிறார் எனலாம்.
குஜராத்தின் வலுவான பிளேயிங் லெவன் (கணிப்பு): சுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், ஷாருக் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ராகுல் திவாட்டியா, ரஷித் கான்/நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், உமேஷ் யாதவ், மோகித் சர்மா
Impact Player (கணிப்பு): விஜய் சங்கர், கேன் வில்லியம்சன்
மேலும் படிக்க | பூஜை போட்ட பாண்டியா... தேங்காய் உடைத்த பவுச்சர் - குஷி மோடில் மும்பை இந்தியன்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ