CSK: பதிரானா இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை... தோனி கையில் எடுக்கும் புது அஸ்திரம்!

Matheesha Pathirana Injury, CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதீஷா பதிரானா காயத்தில் சிக்கி உள்ள நிலையில், அவர் இல்லாவிட்டால் தோனியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 10, 2024, 11:29 PM IST
  • மதீஷா பதிரானாவின் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
  • பதிரானா சிஎஸ்கேவுக்கு டெத் ஓவர்களில் முக்கிய வீரர் ஆவார்.
  • சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ஆர்சிபியை சந்திக்கிறது.
CSK: பதிரானா இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை... தோனி கையில் எடுக்கும் புது அஸ்திரம்! title=

Matheesha Pathirana Alternate Option, CSK: ஐபிஎல் தொடர் (IPL 2024) இன்னும் சில நாள்களில் தொடங்க இருக்கிறது. அனைவருக்கும் தங்களுக்கு பிடித்த அணிகள் மீது ஒரு கண் இருந்தாலும், மற்றொரு கண் எப்போதும் தோனி மீதும் அவர் தலைமையிலான சிஎஸ்கே (CSK) மீதும் இருக்கும் என்பதை அனைவரும் அறிந்ததுதான். சிஎஸ்கே ரசிகர்களுக்கு முழு கவனமும் தல மீதுதான் எனலாம். அந்தளவிற்கு தோனியும் ஐபிஎல் தொடரும் பின்னிப்பிணைந்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இது நடப்பதுதான்.

வழக்கம்போல் இது தோனியின் கடைசி சீசன் என்ற பேச்சுக்கள் தொடங்கிவிட்டது. பெரும்பாலும் இந்த வருடத்துடன் அதுவும் கடைசி போட்டியாக சேப்பாக்கத்தில் விளையாடிவிட்டு தோனி (Dhoni) ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிவிடுவார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தோனி கடந்த மார்ச் 6ஆம் தேதி மாலை சென்னையில் கால் வைத்ததில் இருந்து அவர் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கியது என சிஎஸ்கே ரசிகர்கள் வெயிட்டிங்கிலேயே வெறியேற்றி வருகிறார்கள்.

எம்எஸ் தோனி: 2008 முதல்...

2008இல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் கேப்டனாக இருந்து வருகிறார், தோனி. சில போட்டிகள் காயம் காரணமாக ரெய்னா கேப்டனாக இருந்தாலும் முழு நேர கேப்டனாக தேனியே இருந்துள்ளார். 2022ஆம் ஆண்டில் கேப்டன் பொறுப்பு ஜடேஜாவுக்கு கைமாறியது. அதில் ஜடேஜா 8 போட்டிகளில் கேப்டனாக இருந்தார், மீண்டும் கேப்டன் பொறுப்பு தோனியிடமே செல்ல அவர் அடுத்த 6 போட்டிகளில் அணியை வழிநடத்தினார். இவற்றை தவிர 2016, 2017 ஆகிய இரு சீசன்களிலும் சிஎஸ்கே தடையில் இருந்தது. அதிலும் 2016இல் ரைஸிங் புனே சூப்பர்ஜெய்ன்டஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார், 2017இல் கேப்டன்ஸியில் இருந்து நீக்கப்பட்டார். 

மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் இருந்து மற்றொரு வீரரும் விலகல் - மாற்று வீரர் அறிவிப்பு!

தோனியின் மேஜிக்

இவை அனைத்தையும் விட தோனியின் கேப்டன்ஸி (Dhoni Captaincy) செயல்பாடை களத்தில் பார்ப்பதையே பெரும் பாக்கியமாக ரசிகர்கள் எண்ணுகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு தோனி தனது கேப்டன்ஸியில் என்ன ஸ்பெஷலாக வைத்துள்ளார் என்பதை காணவும், தோனியின் மேஜிக்கை மீண்டும் பார்க்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

சிஎஸ்கே வீரர்களுக்கு காயம்

இவை ஒருபுறம் இருக்க, தோனிக்கும் சிஎஸ்கேவுக்கும் தொடர் தொடங்குவதற்கு முன்னரே பெரும் சிக்கல்கள் எழுந்துருகின்றன. அணியின் வெற்றிகரமான ஓப்பனர் டெவான் கான்வே (Devon Conway Ruled Out) முதற்கட்ட போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். மாற்று வீரராக யாரையும் சிஎஸ்கே இன்னும் அறிவிக்கவில்லை. ரச்சின் மற்றும் மிட்செல் இருப்பதால் இது பெரிய பின்னடைவு இல்லாவிட்டாலும் கான்வே இந்திய சூழலுக்கு இன்னும் பழக்கப்பட்டவர் என்பதை கவனத்தில் கொள்வார்கள். இதில் ரச்சினும், தூபேவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். 

பதிரானா இல்லாவிட்டால் பின்னடைவு

தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் மதீஷா பதிரானாவும் காயத்தால் (Matheesh Pathirana Injury) இலங்கை - வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டியை தவறவிட்டிருப்பதால், தல தோனி சிஎஸ்கே அணியின் டெத் ஓவர்களுக்கு என்ன திட்டத்தை பயன்படுத்தப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். சிஎஸ்கே அணிக்கு பதிரானா, முஸ்தபிஷூர் ரஹீமை தவிர வேறு வெளிநாட்டு முழுநேர வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை. அதிலும் பதிரானாவின் ஸ்லிங் பவுலிங் ஆக்ஷன், டெத் ஓவர்களில் வரும் யார்க்கர்கள் இல்லையென்றால் சிஎஸ்கேவுக்கு அது பெரும் பின்னடைவாக அமையும் வாய்ப்புள்ளது. 

தோனியின் கால்குலேஷன்

இருப்பினும், தோனிக்கு சில ஐடியாக்களை நிச்சயம் யோசித்திருப்பார். முஸ்தபிஷூர் ரஹீம் இடதுகை மிதவேக வேகப்பந்துவீச்சாளர். அப்படி என்றால் தோனிக்கு மிகவும் பிடித்தமானவர் என்றே கூறலாம். இவர் ஐபிஎல் தொடரில் உடற்தகுதி பெற்று விளையாடும்பட்சத்தில் தோனி இவரை வைத்து மாயாஜாலம் காட்ட தயாராக இருப்பார் எனலாம். ரஹீம் மட்டுமின்றி முகேஷ் சௌத்ரியும் தோனியின் கால்குலேஷனில் இருப்பார் என யுகிக்க முடிகிறது. எனவே, பதிரானா இல்லாவிட்டாலும் தோனிக்கு எந்த தலைவலியும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | IPL2024: மும்பை இந்தியன்ஸூக்கு புது மலிங்கா கிடைச்சாச்சு - கதிகலங்கப்போகும் எதிரணிகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News