ஐபிஎல் 2022 - சென்னையை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2022ன் இன்றைய முதல் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்த குஜராத் அணியும், ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த சென்னை அணியும் மோதின.
ஐபிஎல் 2022ன் இன்றைய முதல் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்த குஜராத் அணியும், ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த சென்னை அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கான்வேயும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார். இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கும் கான்வே 5 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி; ருதுராஜுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி குஜராத் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது.இதனால் சென்னையின் ஸ்கோர் சீராக அதிகரித்தது.
ஆனால் மொயின் அலி 21 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவருக்கு அடுத்ததாக ஜெகதீசன் களம் கண்டார். ருதுராஜ் - ஜெகதீசன் ஜோடி குஜராத் பந்துவீச்சை பொறுப்பாக எதிர்கொண்டு விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தியது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் ஐபிஎல்லில் தனது 10ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.
ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையே களமிறங்கிய டூபே ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்ததாக தோனி களமிறங்கி ஜெகதீசனுடன் இணைந்தார். அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி 10 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசிக்கட்டத்தில் பவுண்டரிகள் ஏதும் போகாததால் சென்னை அணியால் 150 ரன்களை எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 133 ரன்களை எடுத்தது. ஜெயகதீசன் 39 ரன்களுடனும், சாண்ட்னர் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹாவும், கில்லும் தொடக்கம் தந்தனர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகள் அடித்து சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022க்குப் பிறகு இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
தொடர்ந்து கில் பொறுமை காட்ட சஹா அதிரடி காட்டினார். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் நல்லபடியாக உயர்ந்தது. இதனால் அந்த அணி பவர் ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது.
விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் ‘குட்டி மலிங்கா’ என அழைக்கப்படும் பதிரணா பந்துவீச அழைத்தார் தோனி. 8ஆவது ஓவரை வீசிய பதிரணா முதல் பந்திலேயே கில்லை வெளியேற்றினார்.
கில்லுக்கு அடுத்தபடியாக மாத்யூ வேட் களம் கண்டார். சஹா - வேட் ஜோடியும் சென்னை அணி பந்துவீச்சை எளிமையாக எதிர்கொண்டது. சிறப்பாக விளையாடிவந்த வேட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பாண்டியாவும் பதிரணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க | RIP Symonds: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நினைவஞ்சலி
களத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஹா தனது அரைசதத்தை பதிவு செய்தார்.பாண்டியாவுக்கு அடுத்து களமிறங்கிய மில்லர் சஹாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 19.1ஆவது ஓவரில் இலக்கை எட்டி அணியை வெற்றி பெற செய்தது. இதன் மூலம் குஜராத் அணி சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR