ரோஹித் சர்மா தலைமையிலான டீம் இந்தியா 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் தயார் ஆகா உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. மே 29 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டிக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. சில வீரர்களுக்கு இத்தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு தென்னாபிரிக்க தொடரில் ஓய்வு பட உள்ளது.
மேலும் படிக்க | விராட் கோலியின் விரக்தி - மைக் ஹெசன் விளக்கம்
தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு, இந்தியா அயர்லாந்துடன் 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஆகஸ்ட் மாதம், ஆசிய கோப்பை 2022 நடைபெற உள்ளது. டி20 உலககோப்பைக்கு தயாராகும் விதமாக இப்போட்டிகள் நடைபெற உள்ளது. அக்டோபர் - நவம்பரில் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, டிசம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடன் விளையாட உள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்திய அணி 2022 ஆம் ஆண்டில் அதிக டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதன் பிறகு உலக கோப்பை போட்டிகளும் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டிற்கான இந்திய அணியின் முழு அட்டவணை:
ஜூன் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - 5 டி20 போட்டி.
ஜூன் - அயர்லாந்து vs இந்தியா - 2 டி20.
ஜூலை - இங்கிலாந்து vs இந்தியா - 1 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டி.
ஆகஸ்ட் - செப்டம்பர் - ஆசிய கோப்பை டி20.
அக்டோபர் - டி20 உலகக் கோப்பை.
டிசம்பர் - இந்தியா vs பங்களாதேஷ் - ஒருநாள் போட்டி.
மேலும் படிக்க | ஓய்வு பெறுவதாக அறிவித்து திரும்ப பெற்ற சிஎஸ்கே வீரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR