Hardik Pandya Ananya Panday Latest Update: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மிக மிக எளிய பின்னணியில் இருந்து திறமையால் மட்டும் உச்சத்தை அடைந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியால் அடையாளம் காணப்பட்டு தற்போது இந்தியாவின் தன்னிகரில்லா வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிரபலமடைவதற்கு முன் ஹர்திக் பாண்டியா அவருடைய வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களை சந்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2022 முதல் ஐபிஎல் 2024 வரை


ஆனால், கடந்த ஓராண்டில் ஹர்திக் பாண்டியாவின் வாழ்வில் நடந்த ஏற்ற இறக்கங்கள் என்பது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாதது எனலாம். 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி, முதல் தொடரிலேயே இளம் வீரர்களை கொண்டு கோப்பையை வென்றார் ஹர்திக் பாண்டியா. 2023இல் இறுதிப்போட்டி வரை குஜராத் அணி வந்தது. தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தார். 


தொடர்ந்து, ஐசிசி உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக தேர்வாகி ஒருசில போட்டிகளை விளையாடியிருந்த அவர், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து தொடரில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின்னர் அந்த காயத்தில் இருந்து போராடி குணமடைந்து மீண்டும் ஐபிஎல் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதுவும் சாதாரண என்ட்ரி இல்லை.


மேலும் படிக்க | ஹர்திக்கை பிரிஞ்சதும் ஹேப்பி மோடில் நடாஷா - செர்பியாவில் முதல் வேலையா என்ன செய்தார் தெரியுமா?


குஜராத் அணியின் கேப்டனாக இருந்த அவர், மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் செய்யப்பட்டு அங்கும் கேப்டன்ஸி பொறுப்பை பெற்றார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா கேப்டன்ஸியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. கிரிக்கெட் உலகில் இது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஐபிஎல் தொடரின்போது மைதானங்களிலும் எதிரொலித்தது. 


உலகக் கோப்பையும், விவாகரத்தும்...


மும்பை வான்கடே மைதானம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் என பல இடங்களில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கடுமையான கோஷங்கள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழும். இந்த கோஷங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் கடைசி இடத்தைதான் பிடித்தது. அவருக்கு எதிரான மனநிலை கடுமையான தருணத்தில் இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை அடித்தது. அதுவும் ஹர்திக் பாண்டியா வீசிய 2 ஓவர்கள் இறுதிப்போட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது, இந்தியாவே அவரை கொண்டாடியது. 


சுனாமியே வந்தாலும் ஸ்விமிங்க போடுவோம்...


அவருக்கு எதிராக கோஷங்கள் எழுந்த வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுந்தது பலருக்கும் ஆனந்ததை அளித்தது. அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்தடுத்து பின்னடைவும் காத்திருந்தது. இந்திய வொயிட் பால் அணிக்கு (டி20, ஓடிஐ) துணை கேப்டனாக இருந்த ஹர்திக்கிடம் இருந்து அனைத்து பொறுப்புகள் தற்போது பறிக்கப்பட்டன. தற்போது அவர் தனது விவாகரத்தையும் அறிவித்திருக்கிறார். 


ஓடிஐ அணியில் இடமில்லை, அடுத்த ஐபிஎல் தொடரிலும் இவர் கேப்டனாக தொடர்வாரா என பல கேள்விகள் இவரை சுற்றி வந்தாலும் ஹர்திக் பாண்டியா எப்போதும் போல் அதே சாந்தமான மனநிலையுடன், சுனாமியே வந்தாலும் ஸ்விமிங்கை போடும் மனோதிடத்துடன்தான் இருக்கிறார் எனலாம். அதேபோல், அவர் குறித்த செய்திகளும் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருக்கின்றன. 



அனன்யா பாண்டே உடன் டேட்டிங்கா?


அந்த வகையில், சமீபத்தில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழாவில் (Anant Ambani Radhika Merchant Wedding), பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே உடன் ஹர்திக் பாண்டியா நடனமாடிய வீடியோக்கள் கடந்த சில நாள்களாக வைரலாகி வந்தது. அவரது விவாகரத்து அறிவிப்புக்கு பின்னரே அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது. அதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, செம வைபில் நடனமாடுவதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் அடுத்து டேட்டிங் வாழ்வுக்கு தயாராகிவிட்டனர் என்ற யூகங்களையெல்லாம் கிளப்பிவிட தொடங்கினர்.



அந்த யூகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா அனன்யா பாண்டேவை ஃபாலோ செய்திருக்கிறார் என்றும், அனன்யா மீண்டும் ஹர்திக்கை ஃபாலோ செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்து ஆன ஈரம் காய்வதற்கு அடுத்த டேட்டிங்கா என நெட்டிசன்கள் ஷாக் ரியாக்சன்கள் கொடுத்தாலும் இதுகுறித்து எவ்வித உறுதியான தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்படும் ஹர்திக் பாண்டியா? மும்பை இந்தியன்ஸ் காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ