இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்படும் ஹர்திக் பாண்டியா? மும்பை இந்தியன்ஸ் காரணமா?

India vs Srilanka: இந்த மாத இறுதியில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Written by - RK Spark | Last Updated : Jul 17, 2024, 02:51 PM IST
  • டி20 போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
  • ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா இல்லை.
  • இலங்கை தொடருக்கான இந்திய அணி.
இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்படும் ஹர்திக் பாண்டியா? மும்பை இந்தியன்ஸ் காரணமா? title=

India vs Srilanka: இந்திய அணி புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இலங்கைக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 27ம் தேதி முதல் டி20 போட்டி துவங்க உள்ளது. இன்னும் இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கவில்லை. சமீபத்தில் ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கு வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை முடிந்த அடுத்த வாரமே இந்த தொடர் நடைபெற்றதால் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அனைத்து முக்கிய வீரர்களும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | தலைமை பயிற்சியாளர் ஆனதும் கம்பீர் வைத்துள்ள முதல் கோரிக்கை!

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அந்த இடங்களில் இளம் வீரர்கள் இடம் பெற உள்ளனர். அவர்களின் இடங்களுக்கு கடும் போட்டியும் நிலவி வருகிறது. இதனால் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழும்பியுள்ளது. டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியை தலைமை தாங்கினார். மேலும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் தான் இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா தலைமை தாங்கினார்.

இந்நிலையில் இலங்கை தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ யோசித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடாக இந்த மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல்லில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் மும்பை அணி தோல்வியை சந்தித்து முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. ஆனால் டி20 உலக கோப்பையில் ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். ஆனாலும் ஹர்திக்கை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ  விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக்கின் செயல்பாடுகள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை டி20 தொடரில் ஷுப்மான் கில், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் போன்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

இலங்கை தொடருக்கான உத்ததேச இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (C), ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ரிஷப் பண்ட் (WK), ரின்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ்.

மேலும் படிக்க | IND vs SL: இலங்கை தொடர்... இந்தியா ஸ்குவாட் அறிவிப்பு எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News