இங்கிலாந்து தோல்வியால் அரையிறுதியில் இந்தியா...? - கூடுதல் குஷியில் ஆஸ்திரேலியா!
ICC World Cup 2023: இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்த நிலையில், அரையிறுதிக்கான பந்தயம் தற்போது சூடுபிடித்துள்ளது எனலாம்.
World Cup 2023 Semi Final Chances: ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup 2023) தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்தாலும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஐந்து முறை சாம்பியன் ஆஸ்திரேலியா, தொடரை நடத்தும் இந்தியா, 1992இன் சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் முதல் முறை கோப்பையை வெல்ல அசுர பலத்துடன் காத்திருக்கும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்குதான் கோப்பைக்கான நேரடி மோதல் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ஆப்கனின் வெற்றி... குஷியில் ஆஸி.,
அந்த வகையில், நடப்பு தொடரை இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சிறப்பாக தொடங்கியிருக்கின்றன. மூன்று அணிகளும் சம பலத்துடன் உள்ள ஒரு அணியை வென்றும், கத்துக்குட்டி அணிகளையும் வென்றிருக்கின்றன. இவர்கள் அரையிறுதி பந்தயத்தை முன்னிலையில் இருந்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்து சற்று பின்னடவில் உள்ளது. இருப்பினும், அந்த அணியும் மீண்டு வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் மறுப்புறம் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக இந்தியா, தென்னாப்பிரிக்கா என பெரிய அணிகளிடம் தோல்வியை கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரின் புள்ளிப் பட்டியலில் (World Cup 2023 Points Table) கடைசி இடத்தில் இருக்கிறது என்று சொன்னால் யாருமே நம்பப் மாட்டார்கள். ஆனால், அது தற்போது உண்மையாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வருமா, வரதா என கேள்விகள் எழுந்த நிலையில், இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் நேற்று அடைந்த தோல்வி ஆஸ்திரேலியாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் எனலாம்.
மேலும் படிக்க | 2011 இங்கிலாந்தில்... 2023 ஆப்கானில்... சொந்த நாட்டை வீழ்த்தி சாதித்த ஜோனதன் டிராட்!
மீண்டும் தொடரில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆஸ்திரேலியாவுக்கு பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனலாம். இங்கிலாந்தின் தோல்வி இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு கூடுதல் நன்மையை அளித்திருக்கிறது என்றாலும், துவண்டு கிடந்த ஆஸ்திரேலியாவுக்கு பெரிய நம்பிக்கை கிடைத்துள்ளது எனலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் பலன் ஏன்?
ஆஸ்திரேலியா இன்று இலங்கையுடன் மோதுகிறது. இன்னும் அந்த அணிக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து என பெரிய அணிகளுடன் இருக்கும் போட்டிகளில் வென்றே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. அதுவும் போக வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து போன்ற அணிகளுடனான போட்டியில் பெரிய ரன்ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றாக வேண்டும். இங்கிலாந்து அணிக்கும் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான என பெரும் புயலே காத்திருக்கிறது என்பதையும் நாம் மறக்க முடியாது. எனவே, ஆஸ்திரேலியா அணிக்கே இதில் கூடுதல் பலன் இருக்கிறது.
இந்திய அணிக்கான வாய்ப்பு?
மறுபுறம் இந்திய அணிக்கு நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் இரண்டில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு செல்வது உறுதியாகிவிடும். இருப்பினும், சிறிய அணிகளுடன் அதிர்ச்சி தோல்வி அடையாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதேதான் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கும் பொருந்தும். பாகிஸ்தான் அணி அடுத்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் நிச்சயம் மூன்று வெற்றிகளை குவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும் படிக்க | இது புதுசு இல்லை... உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் 'அதிர்ச்சி தோல்விகள்' இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ