IPL 2024: 2023ஆம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பித்தது. அதற்குள் நவம்பர் முடிந்து டிசம்பர் இன்னும் சில நாள்களில் பிறக்கப்போகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு மீம் இணையத்தில் வைரலாகி வந்தது. ஜனவரி - ஐபிஎல் - லியோ - உலகக் கோப்பை - டிசம்பர் என அந்த மீமில் குறிப்பிட்டிருந்தது. ஆம், அனைவருக்கும் இந்த ஆண்டு சீக்கிரம் முடிந்துவிட்டதாக நினைத்தாலும், நினைவுகளாக இதுவே பெரும்பாலானோரின் மனதில் பதிந்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோகத்தை ஆற்றும் ஐபிஎல்


அந்த வரிசையில் தற்போது ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலமும் (IPL Auction 2024) சேர்ந்துள்ளது. உலகக் கோப்பை எதிர்பாராத வகையில் ஏமாற்றமாக முடிந்த சோகத்தில் இந்திய ரசிகர்கள் இருக்க டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய இளம் அணியின் வெற்றியை விட, ஐபிஎல் மினி ஏலம், Retention List ஆகியவைதான் சற்று சமாதனப்படுத்தியது எனலாம். குறிப்பாக, தோனி அடுத்த தொடரில் விளையாடுவது உறுதியானது, ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவது போன்ற தகவல்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் மினி ஏலத்தை நோக்கி திருப்பியது.


அந்த வகையில், நேற்றைய தினம் அனைத்தும் அணிகளும் வரும் சீசனில் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கும் வீரர்கள் ஆகியோரின் பட்டியலை வெளியிட்டது. மினி ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு வரை அதாவது டிச. 12ஆம் தேதி வரை ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் இருக்கும். எனவே, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு ஹர்திக் பாண்டியா செல்வாரா இல்லையா என்பதற்கு டிச.12ஆம் தேதி வரை காலக்கெடு உள்ளது எனலாம். 


மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் புயலை கிளப்பபோகும் 5 அணிகள்..! ஏன் தெரியுமா?


One Last Dance


இதுஒருபுறம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு இந்த முறையும் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) கேப்டனாக தொடர்வார் என தெரிகிறது. இந்த முறையும் அவர் கேப்டனாக விளையாடினால் 15 சீசன்களாக சிஎஸ்கேவின் கேப்டனாக செயல்பட்டவர் என்ற பெருமையை பெறுவார், இதுவரை யாரும் இந்த மைல்கல்லை எட்டியதில்லை எனலாம். மேலும், அவருக்கு இது கடைசி சீசனாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கின்றனர். 


மேலும், கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும் அணியின் எதிர்காலத்தை கட்டமைப்பதை கருத்தில் கொண்டும், ரசிகர்களின் வரவேற்பை கருத்தில் கொண்டும் தோனி மற்றுமொரு ஐபிஎல் சீசனை விளையாடுகிறார். மேலும், ரசிகர்கள் குறிப்பாக சென்னை ரசிகர்கள் அவரை சேப்பாக்கத்தில் விளையாடுவதை காண ஆவலாக உள்ளனர்.


ஐபிஎல் தொடருக்கே சிக்கல்?


ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. இந்த முறையும் 10 அணிகள் விளையாடுவதால் சுமார் 70 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் (IPL 2024) மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்கும். இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் (Lok Sabha Election 2024) நடைபெற உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள் எழலாம் என்பதால் 2009, 2014 ஆகிய ஆண்டுகளை போல் போட்டி வெளிநாடுகளுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. 2009இல் தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடைபெற்ற நிலையில், 2014இல் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் நடைபெற்றது. 2019இல் முழுமையாக இந்தியாவிலேயே நடைபெற்றது. 


இடமும், மாதமும் மாறுமா?


மேலும், அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) நடைபெற உள்ளது. மேலும், ஐபிஎல் தொடர் மே மாதம் கடைசி வரை நடந்தால் பல வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதில் சிக்கல் வரலாம். எனவே, ஐபிஎல் தொடரின் தேதிகள் மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், மக்களவை தேர்தல் மற்றும் டி20 உலகக் கோப்பை ஆகியவற்றால் ஐபிஎல் போட்டி நடைபெறும் இடம் மற்றும் மாதங்கள் மாற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், இதுவரை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. ஒருவேளை, ஐபிஎல் போட்டி நடைபெறும் இடமும், மாதமும் மாற்றமடைந்தால் தோனி ரசிகர்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் சற்று ஏமாற்றமாக அமைய வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | IND vs AUS: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தானை முந்தியது இந்தியா... என்ன விஷயம் தெரியுமா?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ