வீரர்களின் உயிருக்கே ஆபத்து... பாதிலேயே நிறுத்தப்பட்ட டி20 போட்டி - பின்னணி என்ன?
BBL Match Called Off: ஆடுகளம் வீரர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்ததால் பிபிஎல் போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டு, மொத்தமாக ரத்து செய்யப்பட்டது.
BBL Match Called Off: கிரிக்கெட்டில் ஆடுகளம் என்பது போட்டியில் மிகப்பெரிய தாக்கம் கொண்டவை. ஆடுகளத்தின் தன்மை, பேட்டர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் ஆடுகளத்தில் கிடைக்கும் பலன்கள் ஆகியவை கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் முதல் வல்லுநர்கள் வரை பல்வேறு பார்வைகளை முன்வைப்பார்கள். மேலும், ஆடுகளம் குறித்த சர்ச்சை என்பது இன்னும் தொடர்ந்து ஏற்பட்டுதான் வருகிறது எனலாம்.
உயிருக்கே ஆபத்து
அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 தொடரான பிக் பாஷ் லீக் (BBL) 4ஆவது போட்டியில் ஆடுகளம் மீண்டும் சர்ச்சையாகி உள்ளது, குறிப்பாக ஆடுகளம் வீரர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அளவிற்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது நடந்து வரும் பிக் பாஷ் லீக் தொடரின் 4ஆவது போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் (Perth Scorchers vs Melbourne Renegades) நேற்று (டிச. 10) நடைபெற்றது. ஜீலாங் நகரில் உள்ள சைமண்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 3.45 மணிக்கு இந்த போட்டி தொடங்கப்பட்டது.
போட்டியின் டாஸை வென்று மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி கேப்டன் நிக் மேடின்சன், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும், டாஸின் போதே மேடிசன் ஆடுகளம் குறித்து இவ்வாறு சொல்லியிருந்தார்,"ஆடுகளம் முற்றிலும் நனைந்துள்ளது. அதனால் ஆடுகளத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் முதலில் பார்க்க வேண்டும்".
திக் திக் பவுண்சர்கள்
போட்டிக்கு ஆரம்பிப்பதற்கு முன் அங்கு மழை பெய்திருந்தது. ஆடுகளம் முடிவைக்கப்பட்டிருந்தபோதும், சில பகுதிகள் மழையால் நனைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், பந்து ஆடுகளத்தில் பிட்ச் ஆகும் இடங்களில் மண் பெயர்ந்து வந்ததால், கணிக்க முடியாத அளவுக்கு பந்து பெரிய பவுண்ஸ் ஆனது. இது ஸ்லாட் லென்த் அருகில் போடப்பட்ட ஒரு பந்து தலைக்கு மேல் உயர்ந்து விக்கெட் கீப்பரின் தலைக்கு வருவது என்பது மிகவும் ஆபாயகரமான ஒன்றாகும் என்பதை பார்ப்பவர்களே புரிந்துகொள்ள முடியும். மெல்போர்ன் அணியின் விக்கெட் கீப்பரான குவின்டன் டீ காக்கும் இதனை உணர்ந்தார்.
ஆடுகளம் பேட்டர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை கருத்தில் கொண்டு போட்டி முதலில் நிறுத்தப்பட்டது. பின்னர், 20 நிமிட ஆலோசனைக்கு பின் போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. களத்தில் இருந்த இரு அணி வீரர்களும் ஆடுகளத்தின் பிரச்னை குறித்து கள நடுவர்களிடம் முறையிட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6.5 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்களை எடுத்திருந்தார்.
ரிக்கி பாண்டிங்கின் கண்டனம்
ஆரோன் ஹார்டி 20 ரன்களுடன் களத்தில் இருந்தார், மறுப்புறம் ஜோஷ் இங்லிஸ் 3 ரன்களுடன் பேட்டிங் செய்து வந்தார். இருவரும் நடுவர்களிடம் தாங்கள் பேட்டிங் செய்ய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தாக கூறப்படுகிறது.
வர்ணனையில் இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங், 7ஆவது ஓவரிலேயே இந்தளவிற்கு கணிக்க இயலாத பவுண்ஸர்கள் வருவது வேடிக்கையானது என நேரலையிலேயே கூறினார். போட்டி தொடர்ந்து நடைபெற்றால் பேட்டர்களின் உடலில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், ஹெல்மட்டில் பந்து தாக்க வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ