IND vs ENG: விராட் கொடுத்த ஷாக்... அரைசதத்தை கொண்டாடாத ரோஹித் - தேறுமா இந்தியா?
IND vs ENG Match Score Update: உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கில், கோலி, ஷ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் இந்தியா தடுமாறி வருகிறது. இதில் விராட் கோலி டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
IND vs ENG Match Score Update: நடப்பு உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) 29ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணி லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக். 29) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ரோஹித் அதிரடி ஆரம்பம்
இரு அணிகளிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக, இந்திய அணி நடப்பு தொடரில் இதுவரை விளையாடி 5 போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங்தான் விளையாடியது. அந்த வகையில், இப்போது முதல்முறையாக முதல் பேட்டிங்கை விளையாடி வருகிறது. அந்த வகையில், ஓப்பனர்களாக ரோஹித் சர்மா - சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை டேவிட் வில்லி மெய்டனாக வீசினார்.அடுத்து கிறிஸ் வோக்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரியை மட்டும் அடித்தார். ஆனால், வில்லி வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என மிரட்டல் அவதாரம் எடுத்தார்.
மேலும் படிக்க | Rachin Ravindra: ரச்சின் ரவீந்திரா பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?
சரிந்த டாப்-ஆர்டர்
இருப்பினும், கிறிஸ் வோக்ஸ் வீசிய 4ஆவது ஓவரில் சுப்மான் கில் 9 ரன்களில் (Shumban Gill) கிளீன் போல்டானார். அவரை தொடர்ந்து விளையாடிய விராட் கோலி (Virat Kohli), வில்லி வீசிய 5ஆவது ஓவரில் நான்கு பந்துகளை சந்தித்து ரன் எடுக்கவில்லை. கிறிஸ் வோக்ஸ் வீசிய அடுத்த ஓவரை ரோஹித் சந்தித்தார், அந்த ஓவர் மெய்டனாக வீசப்பட்டது. அடுத்து கோலி, வில்லி வீசிய 7ஆவது ஓவரில் முதல் நான்கு பந்துகளில் ரன்களே எடுக்கவில்லை. டேவிட் மலானின் அற்புத பீல்டிங்கால் அவரால் சிங்கிளும் ஓட முடியவில்லை, இதனால் விரக்தியடைந்த கோலி 5ஆவது பந்தை கிரீஸில் இருந்து வெளியே வந்து நேராக பவுண்டரி அடிக்க முயன்றார்.
ரோஹித் - ராகுல் நிதான பார்ட்னர்ஷிப்
ஆனால், சரியாக பேட்டில் படாமல் அது மிட் ஆஃப் திசையில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆனாது. இதன்மூலம் 8 பந்துகளை எதிர்கொண்ட கோலி டக்அவுட்டாகி வெளியேறினார். வில்லி முக்கியமான விக்கெட்டை எடுத்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் கிறிஸ் வோக்ஸ் வீசிய 12ஆவது ஓவரில், ஒரு பவுண்சர் பந்தை அடிக்க முயன்று மார்க் வுட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின், ரோஹித் - கேஎல் ராகுல் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றறன்.
அரைசதத்தை கொண்டாடாத ரோஹித்
இந்தியா முதல் 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மேலும், 20 ஓவர்களில் 73 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 25 ஓவர்களில் அதே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை எடுத்தது. ரோஹித் சர்மா 66 பந்துகளில் அரைசதம் அடித்தார், இருப்பினும் அவர் கையை மேலே தூக்கிக் கூட அந்த அரைசதத்தை கொண்டாடவில்லை. மேலும், கேஎல் ராகுல் மறுபுறமும் நிதானம் காட்டுவதால் இந்த பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் இருந்தால் அது இங்கிலாந்துக்கு ஆபத்தாக முடியலாம். அடுத்து சூர்யகுமார் யாதவ், ஜடேஜா ஆகியோரே பேட்டர்களாவர். அந்த வகையில், இந்தியா 280+ எடுத்தால் வெற்றி பெற எளிதாக இருக்கும்.
அஸ்வின் ஏன் இல்லை?
இந்திய அணி இன்று மூன்று வேகப்பந்துவீச்சாளர், 2 சுழற்பந்துவீச்சாளர் என 5 பந்துவீச்சாளர், 6 பேட்டர்கள் என்ற காம்பினேஷனில் வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக சூர்யகுமார், ஷமி ஆகியோரின் தேவை இந்திய அணிக்கு வேண்டியதாகி உள்ளது. அஸ்வினை உள்ளே கொண்டுவந்தால் ஷமி அல்லது சிராஜை வெளியே வைக்க வேண்டும் என்பதால் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என தெரிகிறது.
மேலும் படிக்க | World Cup 2023: 4 போட்டிகளில் தொடர் தோல்வி, அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்ல முடியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ