Hanuma Vihari, Ranji Trophy 2024: ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு காலிறுதிப் போட்டிகளில் மும்பை - பரோடா, விதர்பா - கர்நாடாக போட்டியின் முடிவுகள் இன்னும் தெரியவில்லை, நாளையை ஐந்தாம் நாள் ஆட்டத்தில்தான் யார் அடுத்து சுற்றுக்கு செல்வார்கள் என தெரியவரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேவேளையில், நேற்று முடிந்த தமிழ்நாடு - சௌராஷ்டிரா போட்டியில், தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. தொடர்ந்து, ஆந்திரா - மத்திய பிரதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி இன்றே நிறைவுற்றது. இதில், 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டு ஆந்திர அணி தோல்வியடைந்தது.


நம்பிக்கையை உடைக்கும் சம்பவம்


இதன்மூலம், மார்ச் 2ஆம் தேதி தொடங்கும் அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு அணியுடன் மும்பை அல்லது பரோடா அணியும், மத்திய பிரதேசம் அணியுடன் விதர்பா அல்லது கர்நாடகா அணியும் மோத உள்ளன. மார்ச் 10ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. 


மேலும் படிக்க | அரைசதம் அடித்ததும் சல்யூட் செய்யும் துருவ் ஜூரல்! பின்னால் இருக்கும் காரணம்!


ரஞ்சி டிராபியில் நன்றாக விளையாடினால் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாகலாம் என்ற நம்பிக்கையை பிசிசிஐ தற்போது கொடுத்துள்ளது எனலாம், ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர். இப்படி உள்ளூர் தொடர் மீது வீரர்களுக்கு நம்பிக்கை ஒளி வரும் இந்த நேரத்தில் அதனை உடைத்தெறியும் வகையில் ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. 


பாதிக்கப்பட்ட ஹனுமா விஹாரி...


அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டது வேறு யாரும் இல்லை, இந்திய அணி வீரர் ஹனுமா விஹாரிதான். ஆந்திர அணியின் கேப்டனாக இருந்து, இந்த தொடரின் முதல் போட்டிக்கு பின் அந்த பொறுப்பில் இருந்து விலகிய விஹாரி தனது விலகலுக்கான காரணமும், அந்த பின்னுள்ள குரூரமான அரசியல் போன்றவை குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 


அதில்,"நாங்கள் (ஆந்திர அணி) கடைசி வரை கடுமையாக போராடினோம், ஆனால் வெற்றி கைக்கூடவில்லை. ஆந்திர அணியுடன் மீண்டும் காலிறுதியில் தோல்வியடைந்தோம்.  இந்தப் பதிவு நான் முன்வைக்க விரும்பும் சில உண்மைகளைப் பற்றியது.


மேலும் படிக்க | IND vs ENG: இந்திய அணி வெற்றிக்கு... விராட் கோலியின் முதல் ரியாக்சன் என்ன?


சங்கத்தில் நிலவும் அரசியல் 


பெங்கால் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான் கேப்டனாக செயல்பட்டேன், அந்த ஆட்டத்தின் போது நான் 17ஆவது வீரர் ஒருவரை நோக்கி சத்தம் போட்டேன். அவர் அரசியல்வாதியான தனது அப்பாவிடம்  புகார் செய்ய, பதிலுக்கு அவரது அப்பா என் மீது நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்திடம் கேட்டுள்ளார். கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடி பெங்கால் அணிக்கு எதிராக அன்று நாங்கள் 410 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தோம். என் மீது எந்தத் தவறும் இல்லை என்றாலும், கேப்டன் பதவியில் இருந்து விலகும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.


ஹனுமா விஹாரியின் பதிவு:



15 வீரர்களும் ஆதரவு


மேலும், ஆந்திர அணியின் ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களும் ஹனுமா விஹாரிக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர். குறிப்பாக, ஆந்திர கிரிக்கெட் சங்கத்திற்கு, அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களும் ஆதரவு தெரிவித்து கடிதம் எழுத்தி, அதில் கைப்பட கையெழுத்துப்போட்டு உள்ளனர். அந்த கடிதத்தை பகிர்ந்துள்ள ஹனுமா விஹாரி,"இது மொத்த அணிக்கும் தெரியும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | ராஞ்சி டெஸ்ட்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ