MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!
IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2024 MI vs CSK Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 29வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஓப்பனர்களாக இறங்கினர். ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்பிளேவில் 48 ரன்களை சிஎஸ்கே எடுத்தது. பவர்பிளேவுக்கு பின் ரச்சின் ரவீந்திரா 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ருதுராஜ் கெய்க்வாட் - சிவம் தூபே இணை 90 ரன்களை சேர்த்தனர்.
தோனியின் அந்த 20 ரன்கள்...
மிட்செல் சற்றே பொறுமையாக விளையாடினார். கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்க சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 206 ரன்களை எடுத்தது. தோனி 4 பந்துகளில் 20 ரன்களை எடுத்தது சிஎஸ்கே அணிக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. துபே 66 ரன்களை எடுத்திருந்தார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் படிக்க | KKR vs LSG: முதல் ஓவரிலேயே தோல்வியை உறுதி செய்த லக்னோ... வேகத்தால் பறிபோன போட்டி!
மும்பையை பஞ்சராக்கிய பதிரானா
தொடர்ந்து 207 ரன்கள் என்ற இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை சிறப்பான ஓப்பனிங்கை அளித்தனர். இந்த ஜோடி பவர்பிளேவில் 63 ரன்களை குவித்தது. அப்போதுதான் 8வது ஓவரை பதிரானா வீச வந்தார். வந்த முதல் பந்திலேயே இஷான் கிஷனின் விக்கெட்டை தூக்கினார். அதே ஓவரின் 3வது பந்தில் சூர்யகுமார் யாதவின் கேட்சை முஸ்தபிசுர் ரஹ்மான் பவுண்டரி லைனில் அற்புதமாக பிடித்து டக்கவுட்டாக்கினார். இது மும்பைக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் திலக் வர்மா பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி 60 ரன்களை குவித்த நிலையில், இந்த ஜோடியையும் பதிரானா தான் பிரித்தார். அவரின் 14வது ஓவரில் திலக் வர்மா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவும் 16வது ஓவரில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 5 பந்துகளில் 13 ரன்களை அடித்திருந்தார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் 30 ரன்களுக்கும் மேல் அடித்த ஷெபர்ட் இந்த போட்டியில் 1 ரன்னில் பதிரானா பந்துவீச்சில் டக்அவுட்டானார். அதன்பின், நபி களம் புகுந்து ரோஹித் சர்மா உடன் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பதிரானா சிறப்பாக வீசினார். ரோஹித் கடைசி வரை போராடி சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 105 ரன்களை அடித்தார். சிஎஸ்கே பந்துவீச்சில் பதிரானா 4 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். பதிரானா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
மேலும் படிக்க | மோசமாக விமர்சிக்கப்படும் CSK ரசிகர்.. காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ