சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கு பந்துவீசுவதற்கு தலா 90 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நேரத்தைவிட கூடுதலாக பந்துவீசும் அணிக்கும் போட்டிக் கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து செய்யும் அணியின் தலைவருக்கு அடுத்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இப்போது 2 புதிய ரூல்ஸ்களை ஐசிசி அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Ashes Viral: ஸ்டம்பை ’இரும்பில்’ செஞ்சிருப்பாங்களோ? 


அதன்படி, குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காத அணி, 90 நிமிடங்களுக்குப் பிறகு வீசும் பந்துகளுக்கு இன்னர் சர்க்கிளுக்கு வெளியே அனுமதிக்கப்பட்ட பீல்டர்களில், ஒருவரை இன்னர் சர்க்கிளுக்குள் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவித்துள்ள ஐசிசி, ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட்இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதும் 20 ஓவர் தொடரில் இருந்து இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தபட உள்ளதாக அறிவித்துள்ளது. 


ALSO READ | ரிஷப் பந்தின் மோசமான ஆட்டம் குறித்து அவரிடம் பேசவுள்ளோம் - ராகுல் டிராவிட்!


ஐசிசி கொண்டு வந்த புதிய விதிமுறை, ஏற்கனவே இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 100 பந்துகள் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நல்ல முடிவைக் கொடுத்ததால், அதனை ஐசிசியும் பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல், இனிவரும் 20 ஒவர் போட்டிகளில், ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்ஸில் தலா ஒரு பிரேக் எடுத்துக்கொள்ள ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு அணிகளும் தலா 2.30 நிமிடங்கள் இடைவேளையை எடுத்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR