ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி `பவுலிங்`
உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்னோட்டமாக இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றது.
முதல் பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஒவ்வொரு அணியிலும் 15 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் 11 பேர் பேட்டிங் செய்யலாம். 11 பேர் பீல்டிங் செய்யலாம். பேட்டிங் செய்தவர்கள்தான் பீல்டிங் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
இந்திய அணியில் யுவராஜ் சிங் வைரஸ் காய்ச்சல் காரணமாகவும், ரோகித் சர்மா இங்கிலாந்து செல்வதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினாலும் பங்கேற்கவில்லை. மற்ற 13 பேரும் விளையாடுவார்கள்.