T20 World Cup 2024: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2024 டி20 உலகக் கோப்பை அட்டவணையில் சில மாற்றங்களை செய்துள்ளது. ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கும் இந்த 9வது டி20 உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்கள் கடந்த பிப்ரவரி 1 முதல் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த முறை உலக கோப்பை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.  டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஜூன் 1ம் தேதி நடைபெறும் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் கனடாவும் அமெரிக்காவும் மோதுகின்றன.  இந்நிலையில், ஐசிசி உலக கோப்பைக்கான டிக்கெட் நடைமுறையையும், இரண்டு அரையிறுதிகளுக்கான தேதிகளையும் மாற்றி அமைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Chennai Super Kings: 'உனக்கு இனி பந்துவீச்சே கிடையாது...' - பௌலரிடம் கறாராக சொல்லிய தோனி!


டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, ஏற்கனவே ஜூன் 27 அன்று இரண்டாவது அரையிறுதியை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது முதல் அரையிறுதி ஜூன் 26 அன்றும், ஜூன் 27 அதற்கான ரிசர்வ் நாளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  மறுபுறம், ஜூன் 26 அன்று முதல் அரையிறுதியை நடத்த திட்டமிடப்பட்ட கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியம், இப்போது இரண்டாவது அரையிறுதியை ஜூன் 27 அன்று நடத்தும், மேலும் ஜூன் 28 ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளுக்கு போதிய பயண நேரத்தை வழங்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தவிர, ஜூன் 29 அன்று பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டியை தவிர, மற்ற அனைத்து போட்டிகளின் தொடக்க நேரத்தையும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் போட்டி ஜூன் 5 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அயர்லாந்துக்கு எதிராக தொடங்குகிறது.  மேலும், இந்தியாவின் நான்கு லீக் போட்டிகளும் இந்திய நேரடிப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் போட்டி, ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் நடைபெறுகிறது.  இந்த உலக கோப்பைக்கான டிக்கெட் அனைத்து ரசிகர்களுக்கும் கிடைக்கும் வகையில் நியாயமான மற்றும் சமமான வாய்ப்பை வழங்குவதற்காக ஐசிசி பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 7 வரை ஒரு பொது டிக்கெட் வாக்குச்சீட்டை உருவாக்கியுள்ளது.


இணைய தளம் மூலம், ரசிகர்கள் தங்களுக்கு வேண்டிய ஆறு போட்டிகளுக்கு டிக்கெட்டுகளை விண்ணப்பிக்கலாம். பின்பு, செக் லிஸ்ட் படி ஒவ்வொருவருக்கும் டிக்கெட்கள் கிடைக்கும். டிக்கெட் விலை மற்றும் அதற்கான லின்க் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். குறிப்பிட்ட நேரத்திற்குள் ரசிகர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், வேறொருவருக்கு டிக்கெட்கள் மாற்றப்படும்.  பிப்ரவரி 22 அன்று டிக்கெட்கள் அனைவருக்கும் ஓபன் செய்யப்படும்.  இந்தியன் பிரிமியர் லீக் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.  இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் மாதம் சில நாட்கள் போட்டிகள் நடைபெறாது. பிறகு மே மாதம் தொடங்கி மே 26 அன்று பைனல் நடைபெறுகிறது.


மேலும் படிக்க | யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சொத்து மதிப்பு மற்றும் காதலி யார் தெரியுமா? முழு குடும்ப பின்னணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ