புது டெல்லி: இந்த ஆண்டு கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடை பெறவிருந்த  டி 20 உலகக் கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று (திங்கள்கிழமை) ஒத்திவைத்தது. இதன் காரணமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) ஏற்பாடு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) வழி வகுக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"கோவிட் -19 தொற்றுநோய் (COVID-19) காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று ஐ.சி.சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


டி 20 உலகக் கோப்பை (T20 World Cup) அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் போட்டிகளை நடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மே மாதத்தில் ஐ.சி.சி.க்கு அறிவித்தது. 16 சர்வதேச அணிகளுக்கு தனிமைப்படுத்தும் வசதி ஏற்பாடு செய்வது கடினம் எனத் தெரிவித்திருந்தது.


ALSO READ | IPL 2020 தொடர் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை நடக்கலாம்; ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதிருப்தி


2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான காலமும் மாற்றம்:
இதனுடன், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் முன்மொழியப்பட்ட ஒருநாள் உலகக் கோப்பை போட்டி (2023 Cricket World Cup) தொடருக்கான அட்டவணையை மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்குப் பதிலாக நவம்பரில் விளையாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


UAL ஐபிஎல் கொண்டிருக்கலாம்
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளன, இதுபோன்ற சூழ்நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்த்ட ஏற்பாடு செய்யப்பட்டால், மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் IPL 2020 தொடர் நடத்தப்படலாம். பி.சி.சி.ஐ. கவுன்சில் உறுப்பினர் ஒருவர், "ஆசிய கோப்பையை ஒத்திவைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அது இறுதியில் ரத்து செய்யப்பட்டது. என்று கூறினார். மேலும் உலகக் கோப்பை குறித்த ICC முடிவிற்குப் பிறகுதான், ஐ‌பி‌எல் தொடர் குறித்து அடுத்தக்கட்ட திட்டத்தை ஆலோசனை செய்ய முடியும் என்றார்.


ALSO READ | கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி, ஆசிய கோப்பை ரத்து என சவுரவ் கங்குலி அறிவித்தார்