ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல்: கில் தொடர்ந்து முதலிடம், விராட், ரோஹித் முன்னேற்றம்
ICC ODI Rankings LIst: உலகக் கோப்பை 2023 முடிவில் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். கில் தொடர்ந்து முதலிடத்தில் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ICC ODI Rankings: ஐசிசி (International Cricket Council) ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இன்று (நவம்பர் 22, புதன்கிழமை) வெளியிடப்பட்ட சமீபத்திய ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் மூன்று பேட்ஸ்மேன்கள் டாப்-4 இல் சேர்க்கப்பட்டு உள்ளனர். சுப்மான் கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். விராட் மற்றும் ரோஹித் இருவரும் அடுத்தடுத்த வரிசையில் இடம் பிடித்துள்ளனர். ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசை, பந்துவீச்சு தரவரிசை மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசை விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையின் மூன்று இந்திய வீரர்கள்
இந்திய வீரர் ஷுப்மான் கில் பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கும், ரோஹித் ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். இருவரும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். 2023 உலகக் கோப்பை (2023 Cricket World Cup) தொடரில் விராட் கோஹ்லி 3 சதங்கள் உட்பட மொத்தம் 765 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், பாகிஸ்தானின் பாபர் அசாம் (Babar Azam) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஒரு இடம் பிடித்துள்ளார். 7வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு மாறியுள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஒரு இடத்தை இழந்துள்ளார்.
ரேங்க் | பிளேயர் | நாடு | ரேட்டிங் |
1 | சுப்மன் கில் | இந்தியா | 826 |
2 | பாபர் ஆசம் | பாகிஸ்தான் | 824 |
3 (+1) | விராட் கோலி | இந்தியா | 791 |
4 (+1) | ரோஹித் சர்மா | இந்தியா | 769 |
5 (-2) | குயின்டன் டி காக் | தென் ஆப்பரிக்கா | 760 |
6 (+1) | டேரில் மிட்செல் | நியூசிலாந்து | 750 |
7 (-1) | டேவிட் வார்னர் | ஆஸ்திரேலியா | 745 |
8 | ராஸ்ஸி வான் டெர் டுசென் | தென் ஆப்பரிக்கா | 735 |
9 | ஹாரி டெக்டர் | அயர்லாந்து | 729 |
10 | டேவிட் மலன் | இங்கிலாந்து | 729 |
மேலும் படிக்க - இனி பௌலர்கள் இப்படி செய்தால் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள்... ஐசிசியின் புதிய விதி என்ன?
ஒருநாள் போட்டி பந்துவீச்சு தரவரிசையில் முதல் 10 இடங்களில் 4 இந்தியர்கள்
பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் முகமது ஷமி (Mohammed Shami) முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து பத்தாவது இடத்தில் உள்ளார். தரவரிசையில் முதல் 10 இடங்களில் நான்கு இந்தியர்கள் உள்ளனர், ஷமி மற்றும் சிராஜுடன், ஜஸ்பிரித் பும்ரா நான்காவது இடத்திலும், குல்தீப் யாதவ் ஆறாவது இடத்திலும் உள்ளனர். குல்தீப் ஐந்தாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவரின் புள்ளிகள் (667) ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுக்கு சமமாக உள்ளது. அதே சமயம் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி 10வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் முதலிடத்திலும், இந்தியாவின் முகமது சிராஜ் ஒரு இடத்தையும் இழந்துள்ளனர். இரண்டாமிடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ரேங்க் | பிளேயர் | நாடு | ரேட்டிங் |
1 | கேசவ் மகாராஜ் | தென்னாப்பிரிக்கா | 741 |
2 (+1) | ஜோஷ் ஹேசில்வுட் | ஆஸ்திரேலியா | 703 |
3 (-1) | முகமது சிராஜ் | இந்தியா | 699 |
4 | ஜஸ்பிரித் பும்ரா | இந்தியா | 685 |
5 | ஆடம் ஜம்பா | ஆஸ்திரேலியா | 675 |
6 (+1) | ரஷித் கான் | ஆப்கானிஸ்தான் | 667 |
7 (-1) | குல்தீப் யாதவ் | இந்தியா | 667 |
8 | ட்ரெண்ட் போல்ட் | நியூசிலாந்து | 663 |
9 (+1) | ஷாஹீன் அப்ரிடி | பாகிஸ்தான் | 650 |
10 (-1) | முகமது ஷமி | இந்தியா | 648 |
மேலும் படிக்க - இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? - டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிந்தது!
ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியல்
ஆல்ரவுண்டர் தரவரிசையில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். முகமது நபி இரண்டாவது இடத்திலும், சிக்கந்தர் ராசா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இங்கும் ரஷித் கான் நான்காவது இடத்தில் உள்ளார். டாப்-10ல் உள்ள ஒரே இந்திய வீரர் ஜடேஜா ஒரு இடத்தை இழந்து தற்போது 9வது இடத்தில் இருந்து 10வது இடத்திற்கு சென்றுள்ளார்.
ரேங்க் | பிளேயர் | நாடு | ரேட்டிங் |
1 | அல் ஹசன் | பங்களாதேஷ் | 330 |
2 | முகமது நபி | ஆப்கானிஸ்தான் | 297 |
3 | சிக்கந்தர் ரஜா | ஜிம்பாப்வே | 287 |
4 | ரஷித் கான் | ஆப்கானிஸ்தான் | 265 |
5 | க்ளென் மேக்ஸ்வெல் | ஆஸ்திரேலியா | 250 |
6 | அசாத் வாலா | பப்புவா நியூ கினியா | 248 |
7 | மிட்செல் சான்ட்னர் | நியூசிலாந்து | 247 |
8 | ஜீஷன் மக்சூத் | ஓமன் | 235 |
9 (+1) | மெஹ்தி ஹசன் | பங்களாதேஷ் | 224 |
10 (-1) | ரவீந்திர ஜடேஜா | இந்தியா | 222 |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ