ஐசிசி: இந்தியாவின் இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா..!
ஐசிசி டெஸ்ட் ரேங்கில் முதல் இடத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த இந்தியாவின் இடத்தை, ஆஸ்திரேலிய அணி பிடித்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி ஐசிசி டெஸ்ட் ரேங்கில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என வரிசையாக அந்த அணிகளை வீழ்த்தி வாகை சூடிய இந்திய அணி, மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் எளிதாக அந்த அணியை வீழ்த்தி, டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி விடும் என எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது மட்டுமின்றி, பெரும் அதிர்ச்சியையும் இந்திய அணி கொடுத்தது.
ALSO READ | சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த விராட் கோலி
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. இதனால், டெஸ்ட் தொடரை இழந்தது மட்டுமில்லாமல் ஐசிசி டெஸ்ட் ரேங்க் பட்டியலிலும் சரிவை சந்தித்துள்ளது. டாப் ஸ்பாட்டில் இருந்த இந்திய அணி 2 இடங்கள் மளமளவென சரிந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணியை, தங்களது மண்ணில் துவசம் செய்த ஆஸ்திரேலியா, முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
ALSO READ | இவர்கள்தான் இந்தியாவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் ரேங்க் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆஸஷ் டெஸ்ட் போட்டியில் அந்த அணி இங்கிலாந்தை 4-0 என்ற கணக்கில் சாய்த்தது. பாட் கம்மின்ஸ் டெஸ்ட் கேப்டனாக பதவியேற்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்து வருகிறது. 2வது இடத்தில் நியூசிலாந்து அணி பிடித்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவினாலும், அடுத்தபோட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ததால், அந்த அணி 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதேபோல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் லபுசேன் முதல் இடத்திலும், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் கம்மின்ஸ் முதல் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவில் விளையாட உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR