எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்.16ஆம் தேதி தொடங்குகிறது.. தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில், முதல் சுற்று வரும் அக். 16ஆம் தேதியில் இருந்து அக். 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, சூப்பர் 12 சுற்று அக்.22ஆம் தேதி தொடங்குகிறது. நவ. 9,10 தேதிகளில் அரையிறுதிப்போட்டிகள், நவ. 13ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூப்பர்-12 சுற்றுக்கு போட்டிக்கு முன்பாக, பல்வேறு அணிகள் பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்கின்றன. மேலும், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை. எனவே, பயிற்சியை விரைவாகவே தொடங்க ரோஹித் சர்மா தலைமையிலான 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டது. காயம் காரணமாக பும்ரா தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலான வேகப்பந்துவீச்சாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


மேலும் படிக்க |15 வருட ஏக்கத்தை போக்க... கனவுகளுடன் ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி; கோட்சூட் கிளிக்ஸ்!



காத்திருப்போர் பட்டியலில் உள்ள முகமது ஷமி, தீபக் சஹார் ஆகியோருக்கே பும்ராவுக்கு பதில் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. ஷமி காயத்தால் சிறிது அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே வேளையில், தென்னாப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடர் அணியில் இடம்பெற்றிருந்த தீபக் சஹார் விளையாடாததும் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அவர் ஆஸ்திரேலியா செல்ல ஆயுத்தமாகலாம் என கூறப்படுகிறது. 


இந்திய அணி வரும் அக். 17ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும், அக்.19ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இப்போட்டிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி திட்டங்கள் முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், இன்னும் பயிற்சி தேவைப்படும் என்பதால், இந்தியா மேலும் இரண்டும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.



மேற்கு ஆஸ்திரேலியா அணியுடனான அந்த போட்டிகள் பெர்த் மைதானத்தில் வரும் அக்.10, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து, தனது சூப்பர் -12 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, வரும் அக்.23ஆம் தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. 


இந்நிலையில், மெல்போர்ன் மைதானம் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம், 1 லட்சத்து 24 பேர் அமரும் வசதியுள்ள மெல்போர்ன் மைதானத்தில் சமீபத்தில்தான், ஆஸ்திரேலியா கால்பந்து லீக் இறுதிப்போட்டி நடைபெற்றது. அந்த கால்பந்து போட்டிக்கு பின், கிரிக்கெட்டுக்கான ஆடுகளத்தை மெல்போர்ன் மைதான நிர்வாகம் தயார் செய்யும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


மெல்போர்ன் மைதானத்தில் பல சுப்பர்-12 சுற்றுப்போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியும் இங்குதான் நடைபெற உள்ளது. 


மேலும் படிக்க | ஒரே இடத்தில் 2 கிரிக்கெட் ஜாம்பவான்கள்... ஆனால் வேறு களம் - வைராலகும் புகைப்படங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ