ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ரூப் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவில் உள்ள அனைத்து அணிகள் தலா 1 போட்டியை விளையாடியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக். 27) 2 போட்டிகள் நடைபெறுகின்றன.   இந்திய நேரப்படி, இன்று காலை 8.30 மணிக்கு தென்னாப்பிரிக்கா - வங்கேதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. 


டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர். அந்த அணியில் 5.3 ஓவர்களில் 60 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரரும், கேப்டனுமான டெம்பா பவுமா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், டி காக் - ரூஸ்ஸோ ஜோடி அதிரடியாக விளையாடியது. 


மேலும் படிக்க  | ICC T20 World Cup: IND vs NED - இவருக்கு பதில் இவரா...? இங்கிலாந்து நிலைமையை தவிர்க்க இந்தியா இதை செய்யுமா!



டி காக் 21 (12) ரன்களுடனும், ரூஸ்ஸோ 35 (17) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு போட்டி தொடங்கியுள்ளது. ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை. அங்கு மழை, வெயில், மேகமூட்டம் என வானிலை மாறிவருகிறது. 


இதே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்தான், இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, தொடர் மழை காரணமாக போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


மேலும், மழை நின்றாலும் நாள் முழுவதும் சிட்னி மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடுகளம் சூழலுக்கு ஒத்துழைப்பு தருவதால், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த எதிர்பார்ப்பு அதிமாகியுள்ளது. பெரும்பாலும், பாகிஸ்தான் உடனான பிளேயிங் லெவனே இப்போட்டியிலும் தொடரலாம் என தெரிகிறது. 



தென்னாப்பிரிக்கா - வங்கதேச போட்டி, ஒருவேளை மழை காரணமாக ஆட்டம் ரத்தானால் அது தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரும் பின்னடவாக அமையும். ஏனென்றால், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டி முழுவதுமாக ரத்தானதால், தென்னாப்பிரிக்கா 1 புள்ளியுடன் புள்ளிப்பட்டியில் பின்தங்கியுள்ளது. மேலும், இந்தியா - நெதர்லாந்து போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால் புள்ளிப்பட்டியலில் புயலே வீசும் அளவிற்கு சூழல் மாறும் என கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்படுகிறது.  


மேலும் படிக்க | ICC T20I Ranking: கபாலி ஸ்டைலில் கம்பேக்... டாப் 10-க்கு திரும்பி வந்த விராட் கோலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ