இந்தியாவின் கனவில் மண்ணள்ளி போட காத்திருக்கும் மழை... அரையிறுதி வாய்ப்பு அம்போ?
அடிலெய்டில் தொடர் மழை காரணமாக இந்திய அணி, இன்று உள் அரங்கில் வைத்துதான் பயிற்சி மேற்கொண்டது.
ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வானிலை பெரும் பங்கு வகித்து வருகிறது. இதுவரை மழை காரணமாக மூன்று போட்டிகள் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது.
மேலும், தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே போட்டி தொடர் மழை காரணமாக கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இங்கிலாந்து - அயர்லாந்து போட்டியில் மழை காரணமாக டிஎல்எஸ் முறையில் இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது.
அரையிறுதி சுற்று நெருங்கிவரும் இந்த வேளையில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது என்பதால் மழை வரவே கூடாது என கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். அந்த வகையில், நாளை நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
தென்னாப்பிரிக்காவுடன் கடந்த போட்டியில் தோல்வியுற்றதால், வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுடனான போட்டியில் அதிக ரன்ரேட்களுடன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வங்கதேசத்தை விட இந்தியா வலிமையானது என்றாலும், மழை மனது வைத்தால்தான் நாளையே போட்டியே நடக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றே மழை காரணமாக, வங்கதேசம் தங்களது பயிற்சியை முழுவதுமாக ரத்து செய்தது. இந்திய அணியும் உள் அரங்கில் வைத்துதான் பயிற்சி மேற்கொண்டது. போட்டி நடைபெறும் அடிலெய்டில், நாளை மேகமூட்டம் அதிகமாக இருக்கும் என்றும், போட்டி திட்டமிடப்பட்டிருக்கும் மாலை வேளையில் மழைக்கு 60 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் ஆஸ்திரேலிய வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு அடிலெய்டில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் அதே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Video : செம! மேகத்திற்கு மேலே... கிரிக்கெட் பார்க்க சூப்பரான லோகேஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ