ICC: டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது தெரியுமா?
T20 கிரிக்கெட் வரலாற்றில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது என்பதை ஐசிசி தெரிவித்துள்ளது, ஐந்து வருட சாதனையை முறியடித்தது இந்தியா...
புதுடெல்லி: டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது என்பதை ஐசிசி தெரிவித்துள்ளது. 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டிதான் அதிகம் பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியால் அரையிறுதிக்கு கூட செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு டி20 உலகக் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்த உலகக் கோப்பை போட்டித்தொடரில் மற்றுமொரு வரலாற்று சாதனை படைக்கப்பட்டது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது, அந்த போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India vs Pakistan). இந்த சிறப்பான ஆட்டம், முந்தைய 5 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.
இந்த டி20 உலகக் கோப்பையின் போது, அக்டோபர் 24-ம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டிதான் அதிகம் பார்க்கப்பட்டது. ஸ்டார் இந்தியா நெட்வொர்க்கில் (Star India network) போட்டி 15.9 பில்லியன் நிமிடங்கள் பார்க்கப்பட்டது.
இந்த போட்டி சர்வதேச டி20 வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டியாக மாறியுள்ளது. முன்னதாக, 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய போட்டிதான் அதிகம் பார்க்கப்பட்டது.
கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய ஐசிசி
அதிக பார்வையாளர்களை உலகளவில் பெற்ற ஐசிசி ஆண்கள் T20 போட்டி உலக சாதனை படைத்தது. 1.67 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதை தொலைகாட்சியில் பார்த்துள்ளனர். ஐசிசி நிகழ்வுகளின் ஒளிபரப்பு உரிமைகள் ஐசிசி மற்றும் போட்டியை நடத்தும் நாட்டிடம் உள்ளது.
ALSO READ | சாதனை படைத்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி! ஸ்டார் இந்தியா வெளியிட்ட தகவல்!
இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தப் போட்டியானது 200 நாடுகளில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் கிட்டத்தட்ட 10,000 மணிநேரம் ஒளிபரப்பப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியா, இந்த உலகக்கோப்பைப் போட்டித்தொடரில் இருந்து முன்கூட்டியே வெளியேறினாலும், இந்தியாவில் இந்தப் போட்டித்தொடர், 112 பில்லியன் நிமிடங்களுக்கு மேல் பார்க்கப்பட்டது என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டைஸ் கூறுகிறார். “போட்டி அதிக பார்வையாளர்களைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டி20 கிரிக்கெட் எவ்வளவு பிரபலமானது என்பதை இது காட்டுகிறது” என்கிறார் ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி.
இங்கிலாந்தில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் (India vs Pakistan) பார்வையாளர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது, ஒட்டுமொத்த சந்தையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஏழு சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் முதன்முறையாக PTV, ARY மற்றும் Ten Sports ஆகிய மூன்று சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது, மேலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2016 உடன் ஒப்பிடும்போது 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
ALSO READ | நாட்டை விட ஐபிஎல்லுக்கு வீரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்... கபில்தேவ் ஓபன் டாக்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR