மும்பை: தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் (T20 World Cup) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் (India vs Pakistan) இடையே நடைபெற்ற போட்டியை 1.67 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளனர். இது இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். இது போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது.
ஸ்டார் இந்தியா வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த வாரம் வரை, தகுதிச் சுற்று மற்றும் சூப்பர்-12 கட்டத்தின் முதல் 12 போட்டிகளில் டி20 உலகக் கோப்பையின் மொத்த ரீச் 23.80 மில்லியன் பார்வையாளர்கள்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் (India vs West Indies) அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2016 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிதான் இதற்கு முன் அதிகம் பேர் பார்க்கப்பட்ட டி20 போட்டியாகும். இந்த போட்டியை 1.36 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர்.
இப்போது அதிகம் பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் (India-Pakistan Match) போட்டியே தற்போது அதிகம் பார்க்கப்பட்ட டி20 போட்டியாகும். இது 2016 ஐசிசி உலக டி20 அரையிறுதியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெற்ற சாதனையை முறியடித்தது. பரம எதிரியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி போட்டியில் நேருக்கு நேர் மோதின.
ALSO READ | நாட்டை விட ஐபிஎல்லுக்கு வீரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்... கபில்தேவ் ஓபன் டாக்!
அக்டோபர் 24 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் எதிர்த்து ஆடினார்கள். அந்த போட்டியில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் இந்தியா "சூப்பர் 12" சுற்றுடன் வெளியேறியது.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 குரூப் ஸ்டேஜின் பரபரப்பான முடிவுக்குப் பிறகு, நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு யார் தகுதி பெறுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. குரூப் 1ல் முதல்-2 இடங்களை பிடித்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. குரூப் 1ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறின.
And then there were
Predict which two captains will for the ICC #T20WorldCup 2021 on Nov 14.#LiveTheGame #ENGvNZ #PAKvAUS pic.twitter.com/oLyD8i3U7Z
— Star Sports (@StarSportsIndia) November 9, 2021
சூப்பர் 12 குரூப் போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களான பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தாலும், ஆப்கானிஸ்தான். ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளிடம் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தது.
ALSO READ | அரையிறுதியில் களமிறங்கும் 4 அணிகள்! வெற்றி வாய்ப்பு யாருக்கு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR