SA vs AUS Semi Finals 2: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) அரையிறுதி சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இதையடுத்து, இரண்டாவது அரையிறுதி போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதிப்போட்டியில் இந்தியா


இதுவரை இறுதிப்போட்டிக்கே சென்றிராத தென்னாப்பிரிக்கா அணியும், 5 முறை சாம்பியனுமான ஆஸ்திரேலிய அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை மோதுகின்றன. இரு அணிகளும் குரூப் சுற்றில் 7 போட்டிகளில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்தன. குறிப்பாக, இந்த இரண்டு அணியும் மோதிய லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அசத்தலாக வெற்றி பெற்றது. 


எனவே, இந்திய அணியுடன் மோதப்போவது தென்னாப்பிரிக்காவா அல்லது ஆஸ்திரேலியாவா என்ற ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே இப்போது எழுந்துள்ளது. 1983, 2003, 2011 என தற்போது 2023இல் நான்காவது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இதில் 2003இல் ஆஸ்திரேலியா உடனான இறுதிப்போட்டியில் மட்டுமே இந்தியா படுதோல்வி அடைந்தது. 


மேலும் படிக்க | 3 பார்மட்டிலும் கேப்டன் பொறுப்பை துறந்தார் பாபர்... உருக்கமான பதிவு!


சம பலத்துடன் இரு அணிகள்


இந்நிலையில், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டியை எடுத்துக்கொண்டால் இரு அணிகளும் சம பலம் பொருந்திய அணிகளாகவே உள்ளன. அதிரடி தொடக்கம் இரு அணிகளுக்கு இருந்தாலும், வலுவான மிடில் ஆர்டர் என்பது தென்னாப்பிரிக்காவுக்கே உள்ளது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவிடம் பெரியளவில் ஆல்-ரவுண்டர் இல்லை, ஆனால் ஆஸ்திரேலியா சிறந்த ஆல்-ரவுண்டரை கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருவர்தான் உள்ளனர். மற்றொரு ஸ்பின்னராக ஆல்-ரவுண்டரை நம்பியிருக்கின்றனர் (மார்க்ரம் - மேக்ஸ்வெல்). 


ஆடுகளம் எப்படி? (SA vs AUS Pitch Report)


ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இதுவரை நான்கு போட்டிகள் நடப்பு தொடரில் நடந்துள்ளன. இதில் முதலிரு போட்டிகளில் முதல் பேட்டிங் செய்த அணிகள் 250 ரன்களுக்குள்ளாகவே சுருண்டன. மற்ற இரு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 300 ரன்களை தாண்டின. ஆஸ்திரேலியா நடப்பு தொடரில் இங்கு முதல்முறையாக விளையாடுகின்றன. தென்னாப்பிரிக்கா 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் இந்த மைதானத்திலேயே தோற்றது. இங்கு கடந்த 5 போட்டிகளின்படி, முதல் பேட்டிங் சராசரி 262 ரன்களாகும். அந்த 5 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி பேட்டிங்கையே தேர்வு செய்தன. நாளையும் அதே நிலைமைதான் இருக்கும்.


பிளேயிங் லெவன் கணிப்பு (SA vs AUS Playing XI Prediction)


தென்னாப்பிரிக்கா: குவின்டன் டி காக், பவுமா (கேப்டன்), வான் டெர் டுசென், மார்க்ராம், கிளாசென், மில்லர், யான்சன், கோட்ஸி, கேசவ் மஹராஜ், ரபாடா, என்கிடி


ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், ஜேபி இங்கிலிஸ், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்


மேலும் படிக்க | IND vs NZ: ஜெய் ஷா உடன் ரஜினிகாந்த்... அரையிறுதி போட்டியை காண வந்த பிரபலங்கள் லிஸ்ட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ