India Qualifies To Finals: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இந்தியா - நியூசிலாந்து (IND vs NZ Semi Final Highlights) அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியை உலகமே எதிர்பார்த்தது.
மிரட்டிய நியூசிலாந்து
இந்தியா அணிநியூசிலாந்துக்கு 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் 45 ஓவர் வரை இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் அழுத்தத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் (Kane Williamson), மிட்செல், பிலிப்ஸ் ஆகியோர் மட்டுமே சோபித்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை எடுக்காததால் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. குறிப்பாக, டேவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் சொதப்பலான ஓப்பனிங் நியூசிலாந்துக்கு சுமையாக அமைந்தது. வில்லியம்சன் - மிட்செல் ஜோடி 181 ரன்களையும், மிட்செல் - பிலிப்ஸ் ஜோடி 75 ரன்களையும் குவித்தனர்.
இந்திய அணி பந்துவீச்சில் ஷமி மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவராக இருந்தார். கான்வே, ரவீந்திரா ஆகியோரை பவர்பிளே ஓவரிலேயே வீழ்த்திய ஷமி அடுத்து வில்லியம்சன், டாம் லாதம் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தி மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தினார். ஆனாலும் அடுத்து மிட்செல் - பிலிப்ஸ் ஜோடி இந்தியாவை அச்சுறுத்திய நிலையில், பிலிப்ஸ் விக்கெட்டை பும்ரா கைப்பற்றி ஆட்டத்தின் திசை திருப்பினார்.
ஆட்டநாயகன் ஷமி
தொடர்ந்து, சேப்மேனை குல்தீப் யாதவ் விக்கெட் எடுக்க, சதம் கடந்து நிலைத்து நின்று விளையாடிய மிட்செல் 134 ரன்களில் ஷமியிடம் ஆட்டமிழந்தார். இதற்கு முன் மிட்செல் (Mitchell) 83 ரன்களில் இருந்தபோது, ஷமி அவரின் கேட்சை தவறிவிட்டார். தொடர்ந்து, கடைசி கட்டத்தில் சான்ட்னரை சிராஜ் வீழ்த்தினார். கடைசி பேட்டர்களான டிம் சவுதி, பெர்குசன் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஷமி (Shami) ஆட்டத்தை முடித்துவைத்து இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார். ஷமி 7 விக்கெட்டுகளையும், சிராஜ், பும்ரா, குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஷமி ஆட்ட நாயகனாக தேர்வானார்.
#TeamIndia march into the FINAL of #CWC23#MenInBlue | #INDvNZ pic.twitter.com/OV1Omv4JjI
— BCCI (@BCCI) November 15, 2023
இறுதிப்போட்டியில் யார்?
இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா (SA vs AUS Semi Final 2) அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை (நவ. 15) மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, வரும் நவ. 19ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் குஜராஜ் அகமதாபாத் மைதானத்தில் மோதும்.
மேலும் படிக்க | 3 பார்மட்டிலும் கேப்டன் பொறுப்பை துறந்தார் பாபர்... உருக்கமான பதிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ