Indian Cricket Team: கிரிக்கெட்டில் தற்போது மிக பரபரப்பான சீசன் நடந்து வருகிறது எனலாம். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் போன்ற வளர்ந்து வரும் அணிக் கூட வேற லெவலில் தயாராகி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகள் ஆசிய கோப்பை தொடரில் பலப்பரீட்டை நடத்தி வருகின்றன. மறுப்புறம் இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா மண்ணில் டி20 தொடரை வைட்வாஷ் செய்து கைப்பற்றிவிட்டு தற்போது ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது. அதேபோல், இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.


இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் விளையாடி வருகிறது. இந்த சுற்றில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகளுடன் அடுத்தடுத்து மோத உள்ளது. ஆசிய கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.


மேலும் படிக்க |  இனி வாய்ப்பு கிடைக்காது! ஓய்வை அறிவிக்க போகும் முக்கிய வீரர்!


மாற்று கருத்து


அந்த வகையில், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த செப்.. 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விறுவிறுப்பும், பரபரப்பும் அதிகமாகிவிட்டது எனலாம். பிசிசிஐ அறிவித்த ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள்க கொண்ட எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். எதுவும் சர்ஃப்ரைஸ் இருக்குமா என எதிர்பார்த்தவர்களுக்கு மட்டுமே அது ஏமாற்றமாக தெரிய வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஆசிய கோப்பைக்கு தேர்வான அதே வீரர்கள் தான் உலகக் கோப்பைக்கு தேர்வாக உள்ளார்கள் என்பது ஏற்கெனவே, தெரிந்தாலும் கே.எல். ராகுலின் காயம் தான் பெரிய கேள்வியாக இருந்தது. 


ஆனால், அவர் தற்போது உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் ஆசிய கோப்பையின் சூப்பர்-4 சுற்றிலேயே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், உலகக் கோப்பையை எதிர்நோக்கி இந்திய அணி தனது தயாரிப்பை அதிகப்படுத்திவிட்டது என கூறலாம். ஆனால், தற்போதும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து சிலருக்கு மாற்று கருத்து நீடிப்பதை பார்க்க முடிகிறது. மேலும், அவர்கள் தங்களின் தேர்வுகளையும் கூறி வருகின்றனர். 


இந்திய அணியில் பற்றாக்குறை


இந்நிலையில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் உலகக் கோப்பைக்கான தனது இந்திய ஸ்குவாடை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அதில், சஹால் மற்றும் அர்ஷ்தீப்பை சிங்கை அவர் தேர்வு செய்துள்ள நிலையில், இவர்களை இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்வார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் கூறிய அவர்,"இந்திய அணியில் இந்த இரண்டு பேர் பற்றாக்குறை என்று நினைக்கிறேன். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங். 


இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர், இது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். வலது கை பந்துவீச்சாளர்களால் இதைச் செய்ய முடியாது என்று நான் கூறவில்லை, ஆனால் இடது கை பந்துவீச்சாளரின் துல்லியமான கோணம் விக்கெட்டுகளைப் பெற உதவுகிறது.


மேட்ச் வின்னர் சஹால்


ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் எவ்வளவு திறமையானவர்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றபோது, மிட்செல் ஸ்டார்க் முக்கியப் பங்காற்றினார். 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதல் பந்திலேயே பிரண்டன் மெக்கல்லத்தை அவுட்டாக்கினார். அந்த வேகத்தில் வரும் பந்து எப்போதும் சவாலானதாகவே இருக்கும். சாஹல் மேட்ச் வின்னர். மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் வேறு எந்த நாட்டிற்காகவும் விளையாடியிருந்தால், அவர் எப்போதும் பிளேயங் லெவனில் இருந்திருப்பார்" என்றார்.


மேலும் படிக்க | ODI Rankings: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் அதிக ரேட்டிங் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ