2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ 20 வீரர்களைக் கொண்ட ஒரு குழுவை பட்டியலிட்டுள்ளது என்று தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வரவிருக்கும் பதிப்பில் சில வீரர்கள் விளையாடுவதை பிசிசிஐ விரும்பவில்லை.  அவர்களை ஐசிசி போட்டிகளில் கவனம் செலுத்தும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது.  வீரர்களை காயத்தில் இருந்து தவிர்க்க இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிசிசிஐயின் செயல்திறன் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமணன், முன்னாள் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Rishabh Pant Car Accident: ஐபிஎல் 2023ல் டெல்லி அணியின் கேப்டன் யார்?


இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தொடங்கி 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.  வீரர்களின் பணிச்சுமை நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், வீரர்களின் உடற்தகுதியைக் கண்காணிப்பதற்காக, 10 ஐபிஎல் உரிமையாளர்களுடன் NCA இணைந்து செயல்படும்.  2022ல் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை இரண்டையும் வெல்லத் தவறிய இந்திய அணியின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.



முன்னதாக, பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், இந்த கூட்டம் சம்பந்தமாக முக்கிய செய்திகளை அறிவித்தது.  "இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணை, வீரர்கள் இருப்பு மற்றும் பணிச்சுமை மேலாண்மை தொடர்பான சிக்கல்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.  பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று முக்கிய பரிந்துரைகளை வழங்கியது.


முக்கிய பரிந்துரைகள்:


1. வளர்ந்து வரும் வீரர்கள் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு கணிசமான உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும்.


2. யோ-யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா ஆகியவை இப்போது தேர்வு அளவுகோலின் ஒரு பகுதியாக இருக்கும்.


3. உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி மற்றும் ICC உலக கோப்பைக்களை மனதில் வைத்து, IPL 2023ல் பங்கேற்கும் இந்திய வீரர்களைக் கண்காணிக்க IPL உரிமையாளருடன் NCA இணைந்து செயல்படும்.


மேலும் படிக்க | Rishabh Pant Replacement : ரிஷப் பண்டுக்கு பின்... வாய்ப்புக்கு கழுகாக காத்திருக்கும் இந்த 3 இந்திய வீரர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ