Rishabh Pant Car Accident: ஐபிஎல் 2023ல் டெல்லி அணியின் கேப்டன் யார்?

IPL 2023: ரிஷப் பந்த் இல்லாததால் ஐபிஎல் 2023ல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Dec 31, 2022, 11:55 AM IST
  • விபத்தில் சிக்கிய பந்த்.
  • அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
  • அடுத்த 6 மாதங்கள் கிரிக்கெட் ஆட முடியாது.
Rishabh Pant Car Accident: ஐபிஎல் 2023ல் டெல்லி அணியின் கேப்டன் யார்?  title=

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து தனது வீட்டிற்குச் சென்றபோது விபத்தில் சிக்கினார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ரூர்க்கிக்கு அருகில் உள்ள மங்களூருக்கும் நூர்சானுக்கும் இடையே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.  மருத்துவர்களின் கூற்றுப்படி, பந்தின் நெற்றியில் இரண்டு வெட்டுக்கள் இருந்தன, மேலும் அவர் வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது.  தற்போது பந்த் முழுமையாக குணமடைந்து மீண்டும் விளையாட 2-6 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023ல் பந்த் விளையாடுவது சந்தேகமே. இதனால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | 2k கிட் என நிரூபித்த பிரித்வி ஷா! அணியில் வாய்ப்பு கிடைக்காததால் செய்த காரியம்!

பந்த் இல்லாத நிலையில், ஐபிஎல்லின் அடுத்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் உரிமையை வழிநடத்த மூன்று வீரர்கள் தற்போது முன்னணியில் உள்ளனர்.  ஆஸ்திரேலியா பேட்டர் டேவிட் வார்னர் டெல்லி கேபிடல்ஸ் உரிமையில் முக்கிய வீரராக இருந்துள்ளார். வார்னரின் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. வார்னர் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்த சரியான தேர்வாக இருக்க முடியும்.  அடுத்ததாக பிருத்வி ஷா டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் மற்றொரு தகுதியான தேர்வு. இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு U-19 இந்திய அணியை உலகக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் பந்த்.

மிட்செல் மார்ஷ் டெல்லி அணியின் கேப்டனாக வர வாய்ப்புள்ளது.  2010ல், அவர் U-19 ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மார்ஷ் 2010ல் உலகக் கோப்பை வெற்றிக்கு தனது அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார். மார்ஷின் அற்புதமான தலைமைத்துவ திறன்கள் நிச்சயமாக இந்த முறை அவர்களின் முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவும்.

டெல்லி கேபிடல்ஸ் அணி: ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் வார்னர், முகேஷ் குமார், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, பிரித்வி ஷா, பில் சால்ட், ரிபால் பட்டேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அகமது, லுங்கி என்கிடி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, பிரவீன் துபே மற்றும் விக்கி ஓஸ்வால்.

மேலும் படிக்க | Rishabh Pant Accident CCTV Video : தூக்கத்தில் ஓட்டிய ரிஷப் பண்ட்... தூக்கி வீசப்பட்ட கார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News