இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 


இன்று முதல் ஒரு நாள் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்கிறது.


முன்னதாக இந்த நிலையில் இன்றய ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் கோலி ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். 


இந்த நடக்க இருக்கும் போட்டி இந்த வருடத்தில் நடக்கும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் இரு தரப்பு ரசிகர்களும் மிக்க எதிர்பார்ப்புடன் உள்ளனர்.