IND vs AFG: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு,  இந்தியா திரும்பிய உடன் ஜனவரி 11 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா vs ஆப்கானிஸ்தான் இருதரப்பு டி20 தொடர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் ஒரு சில போட்டிகளில் இதுவும் ஒன்று ஆகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடரில் நட்சத்திர வீரர்களான ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.  இந்த முக்கிய டி20 வீரர்கள் இல்லாததால், இந்தியா இப்போது சில இளம் வீரர்களை தேர்வு செய்ய உள்ளது.  மேலும் இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயம்... தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வழி இதுதான்!


ஹர்திக் பாண்டியா காயம்


ஐசிசி 50 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பாண்டியா இடம்பெற்றிருந்தார். அவர் நான்கு போட்டிகளில் விளையாடி, 2/34 என்ற சிறந்த பந்துவீச்சுடன் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். அக்டோபர் 19 அன்று பங்களாதேஷுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து வெளியேறினார்.  மேலும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ மற்றும் ஒருநாள் தொடரையும், அதற்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரையும்  தவறவிட்டார். அதன்பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டியா விளையாடவில்லை. இந்த அனைத்து டி20 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் இந்தியாவை வழிநடத்தினார், அதே சமயம் ஒரு நாள் போட்டியில் KL ராகுல் அணியை வழிநடத்தினார்.


சஞ்சு சாம்சன்


சஞ்சு சாம்சன் அடுத்த நான்கு மாதங்களில் முக்கியமான போட்டிகளில் விளையாட உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்கா தொடரில் ஒரு அற்புதமான முதல் சதத்தை அடித்தார். மேலும் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவது சஞ்சு சாம்சனுக்கு கடினமாக இருந்தாலும், அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆப்கானிஸ்தான்க்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம் பெற்றால், சஞ்சு சாம்சன் மிகுந்த கண்காணிப்பில் இருப்பார். ஒவ்வொரு போட்டியும் அவரது கடைசி ஆட்டம் போல் விளையாட வேண்டும். மேலும், ஐபிஎல் 2024 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.


ரோஹித் சர்மா


"யார் அணியை வழிநடத்துவது என்பதை தேர்வுக்குழுவினர் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் ரோஹித்துடன் நீண்ட நேரம் விவாதித்தோம், டி20 உலகக் கோப்பையில் அவர் தலைமை தாங்க தயாராக இருக்கிறார். ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. மேலும் அஜித் அகர்கர் ரோஹித்திடம் பேசுவார். அவர் தொடருக்குத் திரும்புவாரா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  


டி20 தொடருக்கான இந்தியாவின் உத்ததேச அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர்/ரவீந்திர ஜடேஜாவ், ரவீந்திர ஜடேஜாவ் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.


மேலும் படிக்க | ஊசிப்போட்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ஷமி... அதிரவைக்கும் தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ