இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்... இந்த பிஸ்தா பிளேயர்களுக்கும் இடம் கிடையாது!
IND vs AFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
IND vs AFG, Predicted Playing XI: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் (IND vs AFG T20 Series) வரும் ஜன.11ஆம் தேதி தொடங்க உள்ளது. பஞ்சாப், இந்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் முறையே இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச டி20 தொடர் இதுதுதான். எனவே, உலகக் கோப்பை அணியை இறுதி செய்ய இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அணியில் ரோஹித், விராட்
அந்த வகையில், இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் சர்மா, விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு சர்வதேச டி20க்கு திரும்பி உள்ளனர். குறிப்பாக, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் சூழலில் ரோஹித் சர்மா (Rohit Sharma) கேப்டன் பொறுப்பையும் பெற்றுள்ளார். டாப் ஆர்டரில் ருதுராஜ், சூர்யகுமார் ஆகியோர் இல்லாததால் விராட் கோலியின் தேவை இந்திய அணிக்கு உள்ளது.
கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சிராஜ், பும்ரா ஆகியோர் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இதில் காணலாம். அதாவது, இந்திய அணி எந்த காம்பினேஷனில் விளையாடும் என்ற கணிப்பையும் இதில் காணலாம்.
மேலும் படிக்க | முகமது ஷமி: நாங்க தான் பெஸ்ட் பவுலிங் யூனிட்... யாரையும் சம்பவம் செய்வோம்..!
சுப்மான் கில்லுக்கு வாய்ப்பே இல்லை
ஓப்பனிங்கில் இடது - வலது காம்பினேஷனுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா களமிறக்கப்படுவார்கள். இதில் பிரச்னையில்லை. நம்பர் 3 இடம்தான் பிரச்னைக்குரிய இடம் எனலாம். விராட் கோலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரை வெளியே அமரவைப்பது இயலாத காரியம். அவருக்கு உரிதான நம்பர் 3 ஸ்பாட்டில் அவர் விளையாடும்பட்சத்தில் சுப்மான் கில்லுக்கு (Shubman Gill) அணியில் ஏறத்தாழ வாய்ப்பில்லை எனலாம். சுப்மான் கில்லை விட சுழற்பந்துவீச்சை விராட் கோலி சற்று சமாளிப்பார் எனலாம்.
ஒருவேளை அடுத்தடுத்த போட்டிகளில் விரர்களின் செயல்பாடுகளை பொறுத்து காம்பினேஷை மாற்றிக்கொள்ளலாம். நம்பர் 4இல் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். ஜித்தேஷ் சர்மா இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக விளையாடுவார் என்றாலும் அனுபவம் காரணமாகவும், ஆப்கானிஸ்தானின் உலகத்தர சுழற்பந்துவீச்சை சமாளிக்கவும் சஞ்சு களமிறக்கப்பட்டு அவருக்கு மிடில் ஆர்டரில் முக்கிய இடத்தை அளிக்க வாய்ப்புள்ளது.
குல்தீப்பா... பீஷ்னோயா...
இதன்பின், நம்பர் 5இல் இடதுகை பேட்டர் திலக் வர்மா, நம்பர் 6இல் ரிங்கு சிங், நம்பர் 7இல் அக்சர் படேல் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை முயற்சித்து பார்க்கலாம். சுழற்பந்துவீச்சில் பீஷ்னோய் மற்றும் குல்தீப் ஆகியோர் உள்ளனர். இதில் பீஷ்னோய் டி20 அரங்கில் முன்னணியில் இருந்தாலும் குல்தீப் யாதவ் கடந்த சில மாதங்களாகவே நல்ல ரிதமில் இருக்கிறார். கடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரிலுமே பீஷ்னோய்க்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடினார். எனவே, இந்த தொடரிலும் அவர் விளையாட வாய்ப்புள்ளது. இருவரையும் விளையாட வைக்கும் அளவிற்கு இந்திய அணி நிர்வாகம் பெரிய ரிஸ்கை எடுக்காது எனலாம். அந்த வகையில், வேகப்பந்துவீச்சில் முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நிச்சயம் விளையாடுவார்கள் எனலாம்.
இரு அணி வீரர்கள் விவரம்
இந்திய அணி ஸ்குவாட்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆப்கானிஸ்தான் ஸ்குவாட்: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மாவுல்லா ஓமர்சாய், ஷரபுதீன் அஷ்ரஃப், முஜீப்தீன் உர் ரஹ்மான், ஃபரீத் அகமது, நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ