4வது போட்டி: இந்தியா வெற்றி பெற 34 பந்தில் 58 ரன்கள் தேவை.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா வெற்றி பெற 335 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடக்க வீரர்களான ரஹேனே 53(66) ரன்களில் கேட்ச் அவுட். ரோஹித் சர்மா 65(55) எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி கேப்டன் விராத் கோலி 21(21) ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாரத விதமாக பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 41(40) ரன்னுக்கு அவுட் ஆனார்.
அரைசதத்தை பூர்த்தி செய்த கேதர் ஜாதவ் 60(62) மற்றும் மனிஷ் பாண்டே 28(20) இருவரும் விளையாடி வந்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தியா 44 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற 31 பந்தில் 36 ரன்கள் தேவை.
இந்தியா 41.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற 53 பந்தில் 84 ரன்கள் தேவை.
முன்னதாக டாஸ் வென்ற ஆசி., முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 231 ரன்னுக்கு தான் முதல் விக்கெட்டை இழந்தது. ஆரோன் பிஞ்ச் 94(96) மற்றும் டேவிட் வார்னர் 124(119) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். பின்னர் வந்த ஸ்மித் 3 ரன்னுக்கு அவுட் ஆனார். டிராவிஸ் 29(38) மற்றும் பீட்டர் ஹான்சாம்கோப் 43(30) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். மார்கஸ் ஸ்ட்னினிஸ் 15(9) மத்தேயு வேட்3(3) அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 335 ரன்கள் தேவை.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், கேதர் ஜாதவ் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.