4வது டெஸ்ட்: இந்தியா 332 ரன்கள்
தர்மசாலாவில் நடைபெற்று வரும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்துள்ளது.
வார்னர் 56 ரன்களும், கேப்டன் ஸ்மித் 111 ரன்களும், மேத்தீவ் வாட் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ்வ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் அட்டா முடிவில் ரன் எடுக்கமால் இருந்தது. பின்னர் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. ராகுல் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 118.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 332 ரன்கள் எடுத்து. புஜாரா 57 ரன்களும், ஜடேஜா 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.