4வது டெஸ்ட்: இந்திய அணி வெற்றி பெற 106 ரன்கள் இலக்கு
தர்மசாலாவில் நடைபெற்று வரும் 4_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 111 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 118.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 332 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 63 ரன்களும், லோகேஷ் ராகுல் 60 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தனது 2-வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரென்ஷா(8 ரன்கள்), வார்னர்(6 ரன்கள்) ஆகியோரை உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு அனுப்பினார். பிறகு வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்தை 17 ரன்களில் குமார் போல்டு ஆக்கினார். பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 45 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், புவனேஷ்குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இந்திய அணி வெற்றி பெற 106 ரன்கள் தேவை.