India vs Australia: தனது சொந்த விசயங்களுக்காக கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்குத் சென்றுள்ளார்.  இருப்பினும் மூன்றாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பேட் கம்மின்ஸ் மட்டும் நாட்டிற்கு திரும்பும் நிலையில், மற்ற அணி வீரர்கள் இந்தியாவில் தங்கி உள்ளனர்.  தற்போது சிட்னிக்கு செல்லும் 29 வயதான பேட் கம்மின்ஸ் மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்தியாவிற்கு மீண்டும் திரும்புனார் என்று கூறப்படுகிறது.  அப்படி அவர் வராத பட்சத்தில் ஸ்மித் அணிக்கு தலைமை தாங்குவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2023: முக்கிய வீரர் மீண்டும் காயம்! சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு!


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  இந்த தொடரில் கம்மின்ஸ் இதுவரை 39.66 சராசரியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.  கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் முதல் இரண்டு டெஸ்டுகளில் தோல்வியடைந்தது. டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்தியா மீண்டும் விட்டுக்கொடுக்காமல் இருந்தது.  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.  இதனால் ஆஸ்திரேலியா அணி, தொடரில் மீதமுள்ள இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற கடுமையாக போராட உள்ளது.



ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் தங்களை நிரூபிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக ஸ்பின்க்கு எதிராக எப்படி ஆடவேண்டும் என்றும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.  பரபரப்பாக சென்ற 2வது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் தொடக்கத்தில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இந்தியாவின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, டெல்லியில் ஆஸ்திரேலியாவை 7-42 என்ற கணக்கில் வீழ்த்தி, டெஸ்ட் வாழ்க்கையின் சிறந்த ஆட்டத்தை எடுத்தார்.  


ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (C), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (WK), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டோட் , மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்


இந்திய அணி: ரோஹித் சர்மா (C), கே எல் ராகுல், ஷுப்மான் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎஸ் பாரத் (WK), இஷான் கிஷன் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் , ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்


மேலும் படிக்க | IND vs AUS: கேஎல் ராகுலுக்கு செக் வைத்த பிசிசிஐ! அணியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ