Border Gavaskar Trophy,IND vs AUS 2nd Test: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை, டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வென்று, தொடரில் முன்னிலை  பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, முதல் போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் டாஸை வென்று ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் (78.4 ஓவர்கள்), 263 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 81 ரன்களை எடுத்தார். பீட்டர் ஹண்ட்ஸ்கம்ப் 72 ரன்களை எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார். 


மாற்று வீரர் அறிவிப்பு


இந்திய பந்துவீச்சு தரப்பில், முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து, இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. 



மேலும் படிக்க | IND vs AUS: டெல்லி டெஸ்ட்... விராட் முதல் புஜாரா வரை - அடையப்போகும் மைல்கல்கள் என்னென்ன?


இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர், மூளை அதிர்ச்சியால் அவதிப்படுவதால் நடப்பு இரண்டாவது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்று வீரராக மாட் ரென்ஷா களமிறக்கப்பட்டுள்ளார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில், சிராஜ் வீசிய பவுண்சர் பந்து, வார்னரின் ஹெல்மட்டை பதம் பார்த்தது நினைவுக்கூரத்தக்கது. 


சிராஜ் பவுண்சர்... கணிக்காத வார்னர்!


சிராஜின் இரண்டு பவுண்சர் பந்துகளை வார்னர் நேற்று எதிர்கொண்டார். இரண்டு பந்துகளும் வார்னருக்கு காயத்தை ஏற்படுத்தின. முதல் பவுண்சரை சரியாக கணிக்காததால், அது பேட்டில் பட்டு அவரின் முழுங்கையில் காயம் ஏற்படுத்தியது. அப்போது, ஆடுகளத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், சில பந்துகள் கழித்து சிராஜ் வீசிய மற்றொரு பந்தையும் சரியாக கணிக்காத வார்னர், அதை அடிக்கப்போய் பந்து ஹெல்மேட்டை தாக்கியது. 



இதில்தான் வார்னருக்கு மூளையதிரிச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் நேற்றைய இந்திய பேட்டிங்கின்போதும், பீல்டிங் செய்ய வராத நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் வார்னர் முதல் இன்னிங்ஸில் 15 ரன்களுக்கு ஷமி பந்தில் ஸ்லிப்பில் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Chetan Sharma Resigns: Zee News ஸ்டிங் ஆப்ரேஷன்... பதவி விலகினார் சேத்தன் சர்மா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ