அஸ்வின் புதிய மைல்கல்: ஆஸி-க்கு எதிராக 100 விக்கெட்டுகளை விழ்த்தி சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார். கும்பிளேவுக்கு பிறகு ஒரு அணிக்கு எதிராக 100 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 17, 2023, 02:48 PM IST
அஸ்வின் புதிய மைல்கல்: ஆஸி-க்கு எதிராக 100 விக்கெட்டுகளை விழ்த்தி சாதனை title=

2வது டெஸ்ட் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி பந்துவீச்ச களம்புகுந்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் சேர்க்கப்பட்டார். மைதானத்துக்குள் வரும்போதே இந்திய அணி வீரர்கள் 100வது டெஸ்ட் விளையாடும் புஜாராவுக்கு காட் ஆப் ஹானர் செய்து அழைத்து வந்தனர்.

அஸ்வின் அபாரம்

ஆஸ்திரேலிய அணியில் உஷ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க இந்திய அணியின் வேகப் புயல்களான முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தங்களின் வேகப்பந்துவீச்சை வீசினர். இருவரும் மெதுவாக துல்லியமாக பந்துவீசினாலும், ஆஸ்திரேலிய அணி விக்கெட் மட்டும் இழக்கவில்லை. உடனடியாக சிராஜூக்கு பதிலாக அஸ்வினை கொண்டு வந்தார் ரோகித் சர்மா. அவர் பந்துவீச வந்ததும் மறுமுனையில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார் முகமது ஷமி. 

50 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி 2வது விக்கெட்டை 91 ரன்களில் இழந்தது. இம்முறை லபுசேன் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். எல்பிடபள்யூ என்ற முறையில் அவர் வெளியேற, அடுத்து வந்த ஸ்மித் வந்தவேகத்தில் கேட்ச் என்ற முறையில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அஸ்வின் சாதனை

மறுமுனையில் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் விக்கெட்டுகளை ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோர் எடுக்க, அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை எடுத்து புதிய மைல்கல்லை எட்டினார் அஸ்வின். அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். முதல் இடத்தில் அனில் கும்ப்ளே இருக்கிறார். ஆலன் பார்டர் கவாஸ்கர் டிராபியில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் கும்பிளே. 3வது இடத்தில் ஹர்பஜன் 95 விக்கெட்டுகளுடன் இருக்கிறார்.

ஆஸி-க்கு எதிராக அஸ்வின்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அஸ்வின் இதுவரை 37 இன்னிங்ஸூகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இதில் 6 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவர், அதிகபட்சமாக 103 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

மேலும் படிக்க | Chetan Sharma Resigns: Zee News ஸ்டிங் ஆப்ரேஷன்... பதவி விலகினார் சேத்தன் சர்மா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News