ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. அனுபவம் முக்கியம் தான், ஆனால் அதைவிட உறுதியும் தன்னம்பிக்கையும் முக்கியம் என்பதை கடல் கடந்து சென்று நிரூபித்துள்ளார்கள் நம் இந்திய வீரர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று 137 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்த ரிஷாப் பந்த், காபாவில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.


இந்த வெற்றியின் மூலம், அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) தலைமையிலான இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.


இரண்டாவது செஷனில் பேட்டிங் செய்ய பந்த் களத்தில் இறங்கியபோது, இந்திய அணி வெற்றி பெற 161 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இருப்பினும், அவர் ஆடத் துவங்கியவுடனேயே 23 வயதான பந்த் தன் ஆட்ட யுக்தியை காண்பிக்கத் துவங்கினார். பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய பந்துவீச்சு தாக்குதலை அவர் அசால்டாக பந்தாடினார்.


டிராவை நோக்கி இந்தியா ஆடுகிறது என்றே அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தார்கள். இந்த போட்டியை டிரா செய்யும் அளவுக்கு இந்தியா தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகத்துடன்தான் பலரும் இன்றைய ஆட்டத்தை காணத் தொடங்கினர். ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் கேம் சேஞ்சராக பந்த் களமிறங்கினார். சுழற்பந்து வீச்சு தாக்குதலையும் துணிவாக எதிர்த்தாடிய பந்த் பலமுறை நாதன் லியோனின் பந்திவீச்சில் கிரீசை விட்டு வெளியே வந்து ஷாட்களை அடித்தார். அவர் சீமர்களுக்கு எதிராகவும் இதேபோன்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தார்.



இந்த தொடரில், விக்கெட் கீப்பர் ஆட்டத்தின் திசையை மாற்றி, இந்தியாற்கு (India) சாதகமாக சூழலை மாற்றியது இது இரண்டாவது முறையாகும். சிட்னியிலும் பந்த் இதேபோன்ற அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்தியாவை அவரால் அப்போது இறுதிகட்டம் வரை அழைத்துச் செல்ல முடியவில்லை. இருப்பினும், ஆர் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் உறுதி இந்தியா ஆட்டத்தை டிரா செய்ய உதவியது.


ALSO READ: IND vs Aus: மழையால் தடைபட்டது 4-வது நாள் ஆட்டம், வெற்றி பெற இந்தியாவுக்கு தேவை 324 runs!!


தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 5 ஆம் நாள் ஆட்டத்தை துவக்கினர். இருப்பினும், ரோஹித் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சேதேஸ்வர் புஜாராவுடன் கில் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தார். இது இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்த்தது.


மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸ்லூட் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் பலவித பௌன்சர்களைப் போட்டு புஜாராவை வாட்டினர். எனினும் அவர் உறுதியாக நின்று ஆடினார். அவருக்கு கில் நன்றாக உதவினார். 146 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த இளம் கில் லியோனின் பந்தில் ஆட்டமிழந்தார்.


அவர் ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் அஜிங்க்யா ரஹானே களத்தில் இறங்கி அணியின் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். 22 பந்துகளில் 24 ரன்களை எடுத்த அவர் கம்மின்சின் பந்தில் ஆட்டமிழந்தார்.


பின்னர் புஜாராவும் மயங்க் அகர்வாலும் ஆட்டமிழந்தனர். இந்தியா அணி (Team India) ஆபத்தில் இருப்பது போல் தோன்றிய நிலையில்​வாஷிங்டன் சுந்தர் பந்த் உடன் இணைந்து மிகவும் முக்கியமான ரன்களை எடுத்தார். அவர்களது கூட்டணி இந்தியா இலக்கை அடைய உதவியது.


ALSO READ: IPL Auction 2021: இந்த விதிகளின் கீழ் வீரர்கள் தனியார் ஏலத்தில் பங்கேற்கலாம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR