ஆஸ்திரேலியாவின் MCG-யில் நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற அதிரடியான வெற்றியைப் பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்திய அணியைப் பாராட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் தோல்விக்குப் பிறகு தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய இந்தியாவை முன்னணியில் இருந்து வழிநடத்தியதற்காக ஸ்டாண்ட்-இன் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை ஷோயிப் பாராட்டினார்.


ஒரு செய்தி சேனலுடனான உரையாடலின் போது, ​​ரஹானேவின் ‘கூல்’ கேப்டன்ஷிப்பின் கீழ் இந்திய வீரர்கள் அசாதாரணமான தன்மையைக் காட்டினர் என்று சோயிப் அக்தர் (Shoaib Akhtar) கூறினார்.


"நான் ஆட்டத்தைப் பார்த்தேன். அன்று நான் பார்த்தபோது இந்தியா ஆஸ்திரேலிய பந்துவீச்சில் திக்குமுக்காடிக்கொண்டிருந்தது. முதலில் நான் காண்கையில் ஸ்கோர் 369 என நினைத்தேன். பின்னர்தான் அது 36/9 என தெரிந்தது. ஆனால் இப்படிப்பட்ட நேரங்களில்தான் வீரர்களின் உண்மையான திறமை வெளிப்படும்” என்று அவர் கூறினார்.


"இந்திய அணியின் (Team India) உறுதியின் வெளிப்பாடு மிகப்பெரியதாக இருந்தது. அஜிங்க்ய ரஹானே மிகவும் அமைதியான ஒருவராக இருக்கிறார். அவர் மைதானத்தில் கூச்சலிடுவது அல்லது மோசமான காரியங்களைச் செய்வது என எதையும் செய்வதில்லை. அவர் அமைதியாக இருந்து தனது வேலையை மட்டும் செய்கிறார். அவரது தலைமையின் கீழ், வீர்ரகள் அபாரமாக விளையாடினார்கள்” என்று அக்தர் மேலும் கூறினார்.


ALSO READ: IND vs Aus: Boxing Day டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!!


விராட் கோலி (Virat Kohli), முகமது ஷமி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் அதிரடியாக தொடரில் திரும்பி வந்த இந்திய வீரர்களை அக்தர் பாராட்டினார். “ரவி சாஸ்திரி, அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) மற்றும் அணி பற்றி நீங்கள் என்ன சொன்னாலும், இந்தியாவின் வலிமை மைதானத்தில் ஆடும் வீர்ரகளில் மட்டுமில்லை. அவர்களது இருப்பில் இருக்கும் வீரர்களும் அணியின் பலம்தான். அந்த வீரர்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நன்றாக விளையாடினார்கள்” என்று அக்தர் குறிப்பிட்டார்.


"ஒரு டெஸ்டில் படுதோல்வி அடைந்து, பின்னர் திரும்பி வந்து அடுத்த டெஸ்டில் வெற்றி பெறுவது அணியின் தன்மையையும் நிர்வாகத் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் வீரர்கள் விளையாடுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.


முன்னாள் பாகிஸ்தான் (Pakistan) வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், 4 போட்டிகள் கொண்ட தொடரில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில சுவாரஸ்யமான மோதல்கள் இருக்க வெண்டும் என தான் விரும்புவதாக கூறினார். தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா திரும்பி வந்துள்ளது மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியின் வலிமையை அதிகரிக்கும்.


"ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது பாகிஸ்தான் அல்லது இந்த துணைக்கண்டத்தின் வேறு ஒரு நாட்டு அணியாலும், இப்படி தோற்கடிக்கப்படும் என 10-15 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இப்போது அது நடக்கிறது. இப்போது, ​​இந்த தொடரில் இதே போன்ற மோதல்களை நான் காண விரும்புகிறேன். இந்தியா பெரிய ஒரு தோல்விக்குப் பிறகு அபாரமாக மீண்டு வந்துள்ளதால், அவர்கள்தான் இந்த தொடரை வெல்ல வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். இந்திய அணி நல்ல குணத்தையும், மிகுந்த தைரியத்தையும் காட்டியுள்ளது. அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது” என்று அக்தர் கூறினார்.


ALSO READ: Australia vs India 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர்களை பந்தாடிய இந்திய பந்துவீச்சாளர்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR