IND vs AUS: இந்தியா வரல... கேப்டன் கம்மின்ஸ் திடீர் முடிவு - அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா!
IND vs AUS: தாய்நாடு சென்றிருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IND vs AUS, Pat Cummins: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலிரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நாக்பூர், டெல்லி ஆகிய இடங்களில் நடந்த அந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது.
தொடரில் முன்னிலை வகிப்பது மட்டுமின்றி, பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் இந்தியா தக்கவைத்துள்ளது. இதையடுத்து, இந்தூர், அகமதாபாத் நகரங்களில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றாலோ, அல்லது இரண்டு போட்டிகளையும் டிரா செய்தாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிடும். கடந்த முறையும் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை சென்றது நினைவுக்கூரத்தக்கது.
இந்தியாவின் தொடர் வெற்றியால், ஆஸ்திரேலிய அணி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்தியாவின் சுழலில் சிக்கி, உலகின் டெஸ்ட் தரவரிசையில் டாப்பில் இருக்கும் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோரும் திணறுவது கடும் பேச்சுக்கு ஆளாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தொடர் காயம் காயம் உள்ளிட்ட பல காரணங்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் தாய்நாடு திரும்பியுள்ளனர்.
மேலும் படிக்க | TNPL Auction 2023: இன்று டிஎன்பிஎல் ஏலம்..எங்கு? எப்படி பார்ப்பது?
வார்னர், ஹேசல்வுட் காயம் காரணமாகவும், மாட் ரென்ஷா, ஆஷ்டன் அகார் ஆகியோர் முதல்தர போட்டிகளை விளையாட இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இதில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸூம் அடக்கம். இவர், அவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியா சென்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டிக்கு முன்பாக இந்தியா வந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது அவர் ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்க முடிவு செய்திருப்பதாக உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், "அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பாட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவார் என நம்புகிறோம். எனினும், அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ஸ்மித் கேப்டனாக செயல்படுவார்" என தெரிவித்துள்ளது.
இதன்மூலம், ஸ்டீவ் ஸ்மித் அடுத்த 2 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் என உறுதியாகியுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், டெல்லி டெஸ்ட் தொடருக்கு பின் தனது மனைவியுடன் துபாய் சென்றிருந்த நிலையில், நேற்று அணியுடன் இணைந்துகொண்டார்.
தனது முடிவு குறித்து பாட் கம்மின்ஸ்,"இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் இருக்க நான் முடிவு செய்துள்ளேன். நான் எனது குடும்பத்துடன் இங்கு இருப்பது சிறந்ததாக உணர்கிறேன். கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் எனது சக வீரர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆதரவை நான் பாராட்டுகிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித், 2014 முதல் 2018 வரை 34 டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக விளையாடியுள்ளார். பின்னர், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | TNPL Auction: இந்த தமிழக வீரருக்கு அடித்தது ஜாக்-பாட்... ஐபிஎல்லை விட அதிக தொகை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ