TNPL Auction: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடர், ஐபிஎல் தொடரை போன்றே தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை அணிகளாக கொண்டு நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தாண்டு ஏழாவது சீசன் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரை போன்று நடத்தப்பட்டாலும், இதில் வீரர்கள் ஏலத்தின் மூலம் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆறு சீசன்களாக, ஒவ்வொரு அணிக்கான வீரர்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், வரையறுத்துக்கொடுத்தது. தற்போது, ஏழாவது சீசனில் இருந்து ஐபிஎல் தொடரை போன்றே வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலா ரூ.70 லட்சம்
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னை மகாபலிபுரத்தில் தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்த ஏலம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் ஒருங்கிணைப்பட்டது. இதில் மொத்தம் 943 பேர் ஏலம் விடப்பட உள்ளனர். சில சர்வதேச வீரர்கள், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் என பல நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் படிக்க | தோனியின் அடுத்த சிஎஸ்கே கேப்டன் பிளான்..! பாதியில் செல்லும் பென் ஸ்டோக்ஸ்
— TNPL (@TNPremierLeague) February 23, 2023
மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா ரூ. 70 லட்சம் வரை செலவிடலாம். ஏலத்தில் ஒரு அணி குறைந்தபட்சம் 16 வீரர்களையும் அதிகபட்சமாக 20 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம். இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ஸ் தமிழ் சேனலில் நேரலையிலும் காணலாம்.
ஏலம் போன நட்சத்திர வீரர்கள்
முதல் நாளான நேற்று பல முக்கிய வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நடராஜனை ரூ. 6.25 லட்சத்திற்கு திருச்சி அணி வாங்கியது. தொடர்ந்து, விஜய் சங்கரை ரூ. 10.25 லட்சத்திற்கு திருப்பூர் அணியும் எடுத்துள்ளது. சென்னை அணி, சஞ்சய் யாதவை ரூ. 17.60 லட்சத்திற்கும், பாபா அபரஜித்தை ரூ. 10 லட்சத்திற்கும் எடுத்துள்ளது. நெல்லை அணி, அஸ்வின் கிரிஸ்டை ரூ. 20 லட்சத்திற்கும், அருண் கார்த்திக்கை ரூ. 12 லட்சத்திற்கும் எடுத்தது.
மதுரை அணி, அதிகபட்சமாக ஹரி நிஷாந்தை ரூ. 12.20 லட்சத்திற்கும், ஸ்வப்னில் சிங்கை ரூ. 12 லட்சத்திற்கும், வாஷிங்டன் சுந்தரை ரூ. 6.75 லட்சத்திற்கும், முருகன் அஸ்வினை ரூ. 6.40 லட்சத்திற்கும் எடுத்துள்ளது. சேலம் அணி, அதிகபட்சமாக அபிஷேக் தன்வாரை ரூ. 13.20 லட்சத்திற்கும், கௌஷிக் காந்தியை 8.40 லட்சத்திற்கும் எடுத்துள்ளது.
As we step into the second day of #TNPLAuction here is where the teams are positioned#NammaOoruNammaGethu #TNPL2023 pic.twitter.com/rw5bpTIi2G
— TNPL (@TNPremierLeague) February 24, 2023
திண்டுக்கல் அணி, ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ. 10 லட்சத்திற்கு தக்க வைத்த நிலையில், அதிகபட்சமாக ஷிவம் சிங்கை ரூ. 15.95 லட்சத்திற்கும், சுபோத் குமாரை ரூ. 10.40 லட்சத்திற்கும் எடுத்தது. அதேபோல, கோவை அணியும் ஷாருக்கானை ரூ. 6 லட்சம் கொடுத்து தக்கவைத்தது. அந்த அணி அதிகபட்சமாக சாய் சுதர்சனை ரூ. 21.60 லட்சம் கொடுத்து எடுத்தது.
டிஎன்பிஎல் > ஐபிஎல்
சாய் சுதர்சன் தான் முதல் நாள் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரராக உள்ளார். இன்றும் ஏலம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை குஜராத் அணி, ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகையில் தூக்கியது. தற்போது, ஐபிஎல் தொடரில் பெற்ற தொகையை விட அதிகமாக, டிஎன்பிஎல் தொடர் ஏலத்தில் அவருக்கு கிடைத்துள்ளது.
Pick of the day Sai Sudharsan#TNPLAuction #NammaOoruNammaGethu #TNPL2023 pic.twitter.com/5Lwqj9JWWi
— TNPL (@TNPremierLeague) February 23, 2023
இடதுகை பேட்டரான சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 145 ரன்களை எடுத்தார். அதில், ஒரு அரைசதமும் அடக்கம். டிஎன்பிஎல் தொடரில் சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்ததக்கது.
மேலும் படிக்க | இந்திய அணியில் இந்த வீரரின் கேரியர் முடிந்துவிட்டது! பிசிசிஐ திடீரென எடுத்த முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ