IND vs AUS, Pat Cummins | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி (Border-Gavaskar Trophy 2024) நாளை வெள்ளிக் கிழமைதொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறமுடியும். அதேபோல் தொடர்ச்சியாக 4 முறை பார்டர் - கவாஸ்கர் டிராபியை தோற்றிருக்கும் ஆஸ்திரேலியா இம்முறை இந்த மோசமான வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. அதற்காக ஒருநாள் உலககோப்பையை வென்று கொடுத்த கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையில் அந்த அணி களமிறங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பெர்த் மைதானத்தில் பார்டர் - கவாஸ்கர் டிராபி முன்பாக கம்பீரமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பாட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தயாராகிவிட்டது. நிச்சயம் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். போட்டிக்கு நடுவே ஐபிஎல் ஏலம் நடப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது எங்களின் பிளேயர்களின் கவனத்தை திசை திருப்பாது.


மேலும் படிக்க | IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!


ஏலத்தில் இருக்கும் பெரும்பாலான பிளேயர்கள் நிறைய ஐபிஎல் ஏலத்தை பார்த்தவர்கள். இங்கிருந்து கொண்டு என்ன செய்ய முடியும்?. நாம் தேர்வு செய்யப்பட்டோமா? இல்லையா? என்பது மட்டும் தான் பார்க்க முடியும். மற்றவை எதுவும் பிளேயர்கள் கையில் இல்லை. அதனால் ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பிளேயர்கள் எல்லோரும் களத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்." என தெரிவித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் நிதீஷ் குமார் ரெட்டி, இந்திய அணிக்காக பெர்த் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவது குறித்து பாட் கம்மின்ஸிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் பாட் கம்மின்ஸ் தலைமையில் தான் நிதீஷ் குமார் ரெட்டி ஐபிஎல் ஆடுகிறார். 


இந்த கேள்விக்கு பதில் அளித்த பாட் கம்மின்ஸ், நிதீஷ் குமார் ஒரு சிறப்பான திறமையான இளம் வீரர். அவரால் மீடியம் வேகத்தில் பந்தை ஸிவிங் செய்ய முடியும். அவர் இந்திய அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி தான் என கூறினார். மேலும், இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ஒரு வேகப்பந்துவீச்சாளராக உங்களின் பார்வை என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த பாட் கம்மின்ஸ், "நல்ல விஷயம், இதுபோன்று இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன்களாக வர வேண்டும்" என்று கூறினார். 


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலை ஒளிபரப்பு செய்கிறது (IND vs AUS live match streaming). டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியிலும் லைவ்-ஆக போட்டியை பார்த்து ரசிக்கலாம். 


மேலும் படிக்க | IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் இந்த பாஸ்ட் பௌலர்... பலம் பெறும் இந்திய அணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ