புதுடெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யார் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது பற்றிய தகவலை BCCI வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை துவங்கப்போகும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நவ்தீப் சைனி தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை ஆடுவார். சிட்னியில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்டில் 28 வயதான சீமர் பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளார். மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டின் போது ஏற்பட்ட கால்ஃப் இஞ்சுரி காரணமாக உமேஷ் யாதவ் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நவ்தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



உமேஷ் யாதவுக்கு மாற்றாக அணியில் இடம்பெறுவதில் டி.நடராஜன் (T Natarajan) உட்பட மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையில் போட்டி இருந்தது. டி. நடராஜன் தற்போது அணியில் இடம் பெறவில்லை என்றாலும், விரைவில் அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடத் துவங்குவார் என்பதில் சந்தேகமில்லை.


இதற்கிடையில், பிளேயிங் லெவனில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) மயங்க் அகர்வாலுக்கு பதிலாக விளையாடுவார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது பேட்டிக் திறமையைக் காட்டிய இளம் வீரர் சுப்மன் கில்லுடன் ரோஹித் ஷர்மா இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: Ind vs Aus: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் KL Rahul out


மயங்க் அகர்வால் நான்கு இன்னிங்ஸ்களில் 31 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


விராட் கோலி (Virat Kohli) தற்போது அணியுடன் ஆஸ்திரேலியாவில் இல்லாத நிலையில், நடந்து வரும் தொடருக்கு அணியின் துணைத் தலைவராக ரோஹித் சேர்க்கப்பட்டுள்ளார். முழுமையான உடல் நலனைப் பெற்ற பிறகு ஆஸ்திரேலியாவில் இது ரோஹித் ஷர்மாவின் முதல் போட்டியாகும்.


ரோஹித்தால் அணிக்கு சேரும் பலத்தைப் பற்றி கூறிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane), "ரோஹித் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். கடந்த இரண்டு தொடர்களில், அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார். எனவே இந்த டெஸ்டிலும் அவரே ஆட்டத்தைத் தொடக்குவார் என நம்பலாம்” என்று கூறினார்.


இந்திய அணியின் Playing XI: அஜிங்க்ய ரஹானே (C), ரோஹித் சர்மா (VC), சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த் (WK), ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி.


ALSO READ: Test Jersey அணிந்து படத்தைப் பகிர்ந்தார் T.Natarajan: டெஸ்டில் ஆடுவாரா மாட்டாரா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR