IND vs AUS: `வருங்கால பிரதமர் ரோஹித்` ரசிகர்கள் குதூகலம்... நரேந்திர மோடி மைதானத்தில் சுவாரஸ்யம்
IND vs AUS: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது போட்டியில், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் அன்பனீசி ஆகியோர் பங்கேற்றனர்.
IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா உடன் 75 ஆண்டுகளாக கிரிக்கெட்டின் வழியாக நட்புணர்வுடன் இருப்பதை கொண்டாடும் வகையில், இப்போட்டியை இரு நாட்டு பிரதமர்கள் இன்று தொடங்கிவைத்தனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசி ஆகியோர் மைதானம் முழுவதும் வாகனம் ஒன்றில் வலம் வந்தனர்.
விராட், ரோஹித் உடன் பிரதமர் மோடி
மேலும், இரு நாட்டு பிரதமர்களும் தங்கள் அணி கேப்டனுக்கு சிறப்பு டெஸ்ட் தொப்பியை வழங்கினார். இந்த வீடியோ ஒன்று, ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு ரசிகர்," வருங்கால பிரதமர் ரோஹித் சர்மா உடன் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி" என குறிப்பிட்டது பெரும் கவனத்தை பெற்றது.
அந்த கௌரவம் வாய்த சிறப்பு தொப்பியை ரோஹித் சர்மாவிடம் பிரதமர் மோடி கொடுக்கும்போது, பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கரவொலி எழுந்தது. முக்கியமான நிகழ்வாக, வீரர்களுடன் தேசிய கீதம் பாடும்போது, பிரதமர் மோடியும் இணைந்து பாடினார். அப்போது, பிரதமர் மோடி, நட்சத்திர வீரர் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் உடன் நின்று தேசிய கீதம் பாடினார்.
மேலும் படிக்க | IND vs AUS: இந்த போட்டியும் மூணு நாள் தானா... ஆடுகளம் நிலவரம் என்ன?
ஓவியங்கள் அன்பளிப்பு
மேலும், இந்திய வீரர்களிடன் பிரதமர் மோடி கைக்குலுக்கினார். ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசி, சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயானிடம் மற்றவர்களை விட அதிக நேரம் பேசினார். அல்பானீசியின் ஓவியம் ஒன்றை அவருக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி அன்பளிப்பாக வழங்கினார். அதே போன்று மோடியின் ஓவியத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவருக்கு கொடுத்தார்.
இரு தலைவர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஹால் ஆஃப் ஃபேம் அறையைத் திறந்து வைத்தனர். அங்கு கிரிக்கெட் மற்றும் பழைய நினைவுகள் குறித்த வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது, போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ரோஹித் சர்மாவும் தான் டாஸ் வென்றால் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்பேன் என கூறியிருந்தார். பேட்டிங் பிட்சாக பார்க்கப்படும் இதில், ஓப்பனர் ஹெட், லபுஷேன் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
பிளேயிங் லெவன்
இந்தியா: ரோஹித் ஷர்மா, சுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன், நாதன் லயான்
மேலும் படிக்க | IND vs AUS: 4வது டெஸ்ட் ட்ராவில் முடிந்தால் இந்தியா WTC பைனலுக்கு தகுதி பெறுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ