தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று (பிப். 27) டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் பல்வேறு அதிகாரிகளை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்திருந்தார்.
மேலும், தமிழ்நாட்டில் முன்பு ஆளுநராக இருந்தவரும், தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித்தின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு கலந்துகொண்டார்.
தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் இன்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு & மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு & மானியங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில், உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, பிரதமர் மோடிக்கு, அவர் சதுரங்க விளையாட்டு தொடர்பான புத்தகம் ஒன்றையும், திருவள்ளூவரின் சிறு சிலை ஒன்றையும் அன்பளிப்பாக அளித்தார்.
இந்த சந்திப்பின்போது, #TamilNaduCMTrophy, #Khelo_India-ஐ தமிழ்நாட்டில் நடத்துவது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
— Udhay (@Udhaystalin) February 28, 2023
மேலும், இந்த சந்திப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில்,"பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்து கலந்துரையாடினோம். அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதலை தெரிவித்தேன். முதலமைச்சர் ஸ்டாலினின் நலன் குறித்து விசாரித்தார். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை குறித்தும், இளைஞர்களுக்கு கேலோ இந்தியா தமிழ்நாட்டில் நடத்துவது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி,"பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் மனநிலையை எடுத்துரைத்தேன். அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தேன்" என தெரிவித்தார். இதையடுத்து, இன்று அவர் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சவால்கள், சாதனைகள் என படிப்படியாக உயர்ந்தவர் முக ஸ்டாலின்: கமல்ஹாசன்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ