மெல்போர்னில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடரை 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5வது நாளில் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இந்தியா 2வது இன்னிங்ஸில் 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த தொடர் முழுவதும் பேட்டிங் செய்ய சிரமப்பட்டு வந்த நிலையில், 4வது டெஸ்டிலும் மோசமாக விளையாடினார். 40 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. மேலும் மொத்தமாக இந்த தொடரில் இதுவரை 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? மௌனம் கலைத்த பிசிசிஐ


அவரது பேட்டிங் பார்ம் இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் 5வது டெஸ்டில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3 முதல் 7 வரை சிட்னியில் நடைபெற உள்ளது. இது தான் இந்த தொடரின் கடைசி போட்டியாகும். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றும். இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டிராபியை தன் வசம் வைத்து கொள்ளும். இதனால் 5வது டெஸ்டின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் என்ன என்ன மாற்றங்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி


ரோஹித் ஷர்மாவின் பார்ம் அணிக்கு கவலை அளித்து வருவதால் அவருக்கு 5வது டெஸ்டில் இருந்து ஓய்வு வழங்கப்பட வாய்ப்புள்ளது. அவருக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்கலாம். ரோஹித் சர்மாவிற்கு பதில் 4வது டெஸ்டில் நீக்கப்பட்ட ஷுப்மான் கில் இடம் பெறலாம். ரோஹித் இல்லாத பட்சத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து கேஎல் ராகுல் ஓப்பனிங் இறங்கலாம். முதல் டெஸ்டில் சதம் அடித்தாலும், அதனை தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார் விராட் கோலி. இருப்பினும் அவர் அணியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ரிஷப் பந்த் களமிறங்குவார்.


மேலும் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இடம் பெறலாம். 4வது டெஸ்டில் இவர்கள் மூவரும் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தனர். நிதிஷ் ரெட்டி தனது முதல் சதத்தையும் பதிவு செய்து இருந்தார். சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் இடம் பெற உள்ளனர். 4வது டெஸ்டில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை எடுத்து இருந்தார் சிராஜ். இதனால் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவின் சாம் கான்ஸ்டாஸ் ஐபிஎல்லில் எந்த அணியில் விளையாடுகிறார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ