புதுடெல்லி: டி நடராஜன் இதுவரை தனது அற்புதமான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இந்த நிலையை அடைய அவர் வாழ்க்கையில் அதிக சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். நடராஜன் IPL-ல் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களிலும் அற்புதமாக பந்து வீசினார்.


டி நடராஜன் (T Natarajan) ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் சிறப்பாக ஆடியதற்கான வெகுமதியும் அவருக்கு கிடைத்தது. உமேஷ் யாதவுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் டெஸ்ட் போட்டித் தொடரில் தொடர்ந்து ஆட முடியாமல் போனது. இந்த நிலையில், டி. நடராஜன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் (RP Singh) நடராஜனின் திறமையைப் பாராட்டியுள்ளார்.


நடராஜனைப் பாராட்டி ட்விட்டரில், ஆர்.பி.சிங், “நடராஜனின் கதையை எழுதுவது யார்? டி.நடராஜனின் கதையை விட சிறந்த உத்வேகம் தரும் ஒரு கதையைக் கேட்டதாக எனக்கு நினைவில்லை. ஒரு நெட் பௌலரில் இருந்து வெள்ளை பந்து வீச்சாளர் ஆனார். இப்போது டெஸ்ட் போட்டியில் ஆடப் போகிறார். IPL முதலே அவருக்கு இருக்கும் நல்ல ஃபார்ம் இன்னும் தொடர்கிறது.” என்று எழுதியுள்ளார்.



ALSO READ: IND Vs Aus: Sydney-ல் தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடக்கூடும் தமிழக வீரர் T.Natarajan


எனினும், சிட்னி (Sydney) டெஸ்டில் நடராஜன் விளையாடுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் ஷர்துல் தாகூருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அனுபமம் நடராஜனை விட அதிகம் இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள்.


இந்த சூழ்நிலையில், மூன்றாவது டெஸ்டில் களமிறங்கப் போகும் இந்திய அணியில் (Team-India) தாகூர் இருக்கக்கூடும் என்றும் சில கூறுகின்றனர். நடராஜனுக்கு அதிக வாய்ப்பு இருக்கக்கூடும் என்றும் பலர் நம்புகின்றனர்.


எது எப்படி இருந்தாலும், நடராஜனின் திறமை உலக அரங்கில் பளிச்சிட்டு விட்டது. இந்த டெஸ்டில் இல்லாவிட்டாலும், விரைவில் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் தன் அபார பந்துவீச்சை காண்பித்து அணியின் வெற்றிக்கு உதவுவார் என்பதில் சந்தேகம் இல்லை. 


ALSO READ: T.Natarajan: சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னிக்கு பயணம் in pics


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR