இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான வீரர்களின் பட்டியலில் டி நடராஜனின் பெயர் இருந்தாலும், அவர் போட்டிகளின் பிளேயிங் இலெவனில் இடம் பெறுவார் என பலர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக விளையாடி இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) அனைவரது கவனத்தையும் ஈர்த்த பின்னர், நடராஜனுக்கு வாய்ப்புகள் அவரைத் தேடி வரத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், அவர் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தன் முதல் சர்வதேச ஆட்டத்தைத் துவக்கியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலிய (Australia) அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் T-20 போட்டிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தர். பல இந்திய வீரர்கள் காயமுற்றுள்ள நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் டி. நடராஜனுக்கு தற்போது விளையாட அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரே சுற்றுப்பயணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டி. நடராஜன் (T.Natarajan) படைத்துள்ளார்.


"ஒரே சுற்றுப்பயணத்தில் 3 வடிவங்களிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்திய வீரர்…@Natarajan_91! #AUSvsIND #OrangeArmy” என்று SRH தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து ட்வீட் செய்தது.


"கனவுகள் இப்படித்தான் இருக்கும். @Natarajan_91 –க்கான மிகச்சரியான தருணம். அவருக்கு #TeamIndia –வின் கேப் நம்பர் 300 வழங்கப்படுகிறது. நட்டு இப்போது அனைத்து வகை விளையாட்டிற்குமான வீரர்! #AUSvIND” என்று BCCI ட்வீட் செய்தது.



"டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வருக ... தங்கராசு நடராஜன் ஒரே சுற்றுப்பயணத்தின் போது மூன்று வடிவங்களிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்திய வீரர் ஆகிறார்” என்று ICC ட்வீட் செய்தது.


ALSO READ: IND vs Aus: 4-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார் பும்ரா, காரணம் இதுதான்


வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடரில் அவர் செய்தது போலவே, நடராஜன் 4 வது டெஸ்டின் முதல் நாளில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்த மேத்யு வேட் (45) மற்றும் மார்னஸ் லாபூசாக்னே (108) ஆகிய இரு பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றினார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்திருந்தது. இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி நடராஜன் இந்திய அணியை மீண்டும் பாதையில் கொண்டு வந்தார்.


போட்டி துவங்குவதற்கு முன்னர் ஷப்துல் தாகூரும் சேர்க்கப்பட்டதால், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் காபா டெஸ்டில் இந்தியா களமிறங்கியுள்ளது. ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் காயங்கள் காரணமாக இறுதி டெஸ்டில் இருந்து வெளியேறினர். ரோஹித் ஷர்மா (Rohit Sharma) மீண்டும் வந்ததால் மூன்றாவது டெஸ்டில் ஆடாத மயங்க் அகர்வால் அணிக்கு மீண்டும் வந்தார்.


இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இருன்றி டிரா ஆனது. ஆகையால் இந்த தொடரின் முடிவை இந்த நான்காவது டெஸ்ட் போட்டியே முடிவு செய்யும். 


ALSO READ: Test Jersey அணிந்து படத்தைப் பகிர்ந்தார் T.Natarajan: டெஸ்டில் ஆடுவாரா மாட்டாரா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR