INDvsAUS: பாட் கம்மின்ஸ் விலகல்; பிசிசிஐ போட்ட டிவீட் - பின்னணி காரணம் இதுதான்
Pat Cummins; தாய்க்கு உடல் நலக்குறைவால் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். அவர் எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 3வது போட்டி மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். அவருடைய தாய்க்கு ஏற்பட்டிருக்கும் உடல்நல குறைவு காரணமாக அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்திருக்கிறது.
தாயின் கடினமான நேரத்தில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்ற அவரின் கோரிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது. இது குறித்து பாட் கம்மின்ஸ் கூறும்போது, தாய் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது நான் என் குடும்பத்தினருடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. என்னுடைய சூழலை புரிந்து கொண்ட சக அணி வீரர்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றி என தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யும் கம்மின்ஸ் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அவருடைய விலகல் ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வார்னர், ஹாசில்வுட், ஆஸ்டன் அகர் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து டெஸ்ட் அணியில் இருந்து விலகி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். முக்கிய வீரர்களின் விலகல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கம்மின்ஸூக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார். மேலும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேம்ரூன் கிரீன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப உள்ளனர்.
அவர்கள் இருவரின் வருகை ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய அணியை பொறுத்தவரை மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதனை கருத்தில் கொண்டே இந்திய அணியினர் அடுத்த டெஸ்ட் போட்டியில் களம் காண இருக்கின்றனர்.
மேலும் படிக்க | இந்திய அணியில் இந்த வீரரின் கேரியர் முடிந்துவிட்டது! பிசிசிஐ திடீரென எடுத்த முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ